What is Yoga? - யோகா என்பது என்ன?

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
நம்மில் பலர் யோகா என்றால் தலைகீழாக நிற்பது, ஏதோ ஆசிரமத்தில் வசிப்பது என்றுதான் புரிந்துக் கொண்டுள்ளோம். ஆனால் காடானாலும் சரி, வீடானாலும் சரி வாழும் முறையே யோகா என்பதை இங்கு அழகுபட விவரிக்கிறார் சத்குரு

யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப் பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள்.


யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல. எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம். அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும்.


கேள்வி: யோகா என்பது எல்லோருக்குமானதா? யோகாவைக் கற்றுக் கொள்ள உள்ள நிபந்தனைகள் என்ன?



நிச்சயமாக இது எல்லோருக்கும் ஆனதுதான். ஏனென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ, உணர்ச்சியின் மூலமாகவோ, தங்கள் உடலின் மூலமாகவோ, தங்களின் சக்தியின் மூலமாகவோ ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதை நாம் சற்றே முறைப்படுத்த மட்டுமே முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்தால் அவர்களின் முயற்சிகள் பலனுடையதாக இருக்கும்.


மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. பன்னெடுங்காலமாகவே இங்கிருக்கும் ஒரு முறை தான் யோகா. ஈஷா யோகா என்றால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும், உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உங்களுடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருந்தால் அதுதான் யோகா. எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: யோகா என்பது என்ன?

Nice explanation about யோகா ! thank you !
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
விளக்கத்திற்கு நன்றி
 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,870
Likes
4,622
Location
Nagercoil
#8
Nice Sharing Sir.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.