What Kind of Couple Are You? - நீங்க எந்த வகை தம்பதியர்?

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
கணவன் மனைவி உரையாடல் சிம்பிள் சமாச்சாரம் கிடையாது. அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தம்பதியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து அதன் அடிப்படையில் உரையாடல் இருக்க வேண்டும் என்கிறார் ரினாடா பாரிஸ் எனும் குடும்ப ஆலோசகர்.
முதல் வகை தம்பதியினர் “அமைதி தம்பதியர்”. அமைதி என்றதும் உம்மணாமூச்சியாய் இருப்பார்கள் என நினைத்து விடாதீர்கள். நிறைய பேசுவார்கள். “கந்தசாமில விக்ரம் பிச்சு உதறிட்டாரு இல்ல ? நாலு நாளா வெயில் மண்டையைப் பொளக்குதுப்பா., அமெரிக்காவில இந்த நேரம் ஸ்னோ. என்னவோ தெரியல ஈரான் வேற அணுகுண்டு தயாரிக்கப் போவுதாம்.”இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு பேசிக் கொள்வார்கள். ஆனால் தங்களைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள். சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். “என்ன சோகமா இருக்கே ஏதாவது பிரச்சினையா” என அக்கறையாய் விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும் “ஒண்ணுமில்லையே” ன்னு சொல்லி விட்டால் ஓகே என விட்டு விடுவார்கள். ஒரு வீட்டில் இருக்கிறார்களே தவிர இவர்கள் இரண்டு வாழ்க்கை வாழ்பவர்கள். இரயில் தண்டவாளங்கள் போல. வாழ்க்கை சந்தோசமாகத் தான் போகும். பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் என்ன ? ஆத்மார்த்த புரிதலோ அன்போ இருக்காது. வீட்டுக்கு போனா ஒரு துணை உண்டு என சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான்.

“சண்டையைத் தவிர்க்கும்” தம்பதியர் இரண்டாவது வகை. “சரி விடும்மா .. நீ சொல்றது தான் சரி” என்பது இந்த வகை தம்பதியினரின் உரையாடல். நம்ம ஊர் கிராமத்து பெண்களை இந்த கூட்டத்தில் கன கட்சிதமாய் பொருத்தலாம். “தேவையில்லாம எதுக்கு சண்டை” என அடுத்தவர் சொல்வதை ஒத்துக் கொள்வது. இல்லாவிட்டால் ஒன்றுமே பேசாமல் சைலண்டாகி விடுவது. இது தான் இவர்களுடைய வழக்கம். அன்னியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள் திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலண்டாகிவிடுவார்.

“எப்போதும் சண்டை” மூன்றாவது வகை தம்பதியர். “ சாப்பாட்டுல ஏதோ குறையுதே ..” என்று எதார்த்தமாய்ச் சொன்னாலே “ ஆமா உங்க அம்மா சமைச்சா மட்டும் தான் உங்களுக்குப் புடிக்கும்” என்பது இந்த ரகம். அடுத்தவர் செய்வதிலுள்ள குற்றத்தை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பது இங்கே சகஜம். இது கொஞ்சம் சீரியஸ் கேஸ். பெரும்பாலும் உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். இந்த தம்பதியரிர் நிம்மதியின்றி பெரும்பாலும் மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நட்புத் தம்பதியர்” நான்காவது வகையினர். நல்ல நட்புடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷுவல் கப்பிள் என்று சொல்லலாம். தாம்பத்ய நெருக்கம் இருக்காது. வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது. இவர்கள் பேச்சில் குறை வைக்க மாட்டார்கள். ஒபாமாவின் ஹெல்த் பிளான் முதல் ஒசாமாவின் அட்டாக் பிளான் வரை பேசுவார்கள். அலுவலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் எல்லாம் பேசுவார்கள். ஆனால் ஒரு அழுத்தமான குடும்ப உறவு அவர்களுக்கிடையே இருக்காது.

“நெருக்கமான தம்பதியர்” ஐந்தாவது வகை. “இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்” என்பது வரை வெளிப்படையாய் பேசுவார்கள். எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள். ஆனாலும் ஆழமான குடும்ப உறவும் புரிதலும் இருக்கும். இப்படி வாழ்வது வெகு கடினம். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும் தான் இதில் ஹைலைட். ரொம்ப ரொம்ப கொஞ்சம் தம்பதியர் தான் இந்த நிலையில் வருவார்கள். உண்மையில் பல தம்பதியர் இதை விரும்புவதே இல்லை.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very interesting analysis! thank you!
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3
Very interesting analysis! thank you!
U r welcome sis........:rolleyes:
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
very nice ... thank you jeya sis
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#5
Nice Jeya..
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
very nice ... thank you jeya sis
Thank u and welcome sis.........:rolleyes:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7
Thank u dear.........:rolleyes:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#8
பகிர்வுக்கு நன்றி
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
பகிர்வுக்கு நன்றி
You are welcome sis..........:rolleyes:
 
Joined
Jun 30, 2011
Messages
20
Likes
17
Location
NY
#10
thanks for sharing dear!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.