WhatsApp number introduced to complaint the quality of food in Chennai - உணவில் கலப்படமா..? வாட்ஸ் அ

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,092
Location
Germany
#1
உணவில் கலப்படமா..? வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்!



உணவில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால், புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது உணவு பாதுகாப்புத் துறை.
உணவில் கலப்படம் செய்யப்படுவது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பல்வேறு நோய்களுக்கு அப்பாவி மக்கள் ஆளாகி வருகின்றனர். இதையடுத்து கலப்படம் செய்யப்பட்ட உணவுகள் குறித்த புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொது மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொது மக்கள் மேற்க்கண்ட எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்கள் மாவட்ட நியமன அலுவலர் அவர்களின் மேற்பார்வையின்படி அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine July 2017. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.