Whatsapp steals the life of Married women-பெண்களை துரத்தும் புதிய வில்லன்க&#

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்கள்தான் அந்த வில்லன்கள். திருட்டுக்காதலுக்கு களம் அமைத்துக்கொடுப்பது, தேவையற்ற பழைய காதல் உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பது, கணவன்–மனைவி இடையே மனந்திறந்து பேசும் நேரத்தை அபகரித்து இனிய இல்லற உறவுகளை சீர்குலைப்பது ஆகிய பிரச்சினைக்குரிய வேலைகளை இந்த புதிய வில்லன்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் ‘இவைகள் மீது விழிப்பாக இருங்கள்’ என்று உலகமே மக்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. வால்ஸ்டீரிட் ஜார்னல் என்ற பிரபல இதழ் ‘அமெரிக்கன் அகாடமி ஆப் மேர்ட்டிமோனியல் லாயர்ஸ்’ அமைப்பின் சர்வே ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ‘பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவைகளின் அதிக உபயோகத்தால் விவாகரத்துக்கள் அதிகரித்திருக்கின்றன’ என்று குறிப்பிடுகிறது.

ஆணுறை நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பில் சிலர் ‘மனைவியிடம் உறவு கொள்ளும் நேரத்தில்கூட பேஸ்புக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக’ கூறியிருக்கிறார்கள். இதில் இருக்கும் உண்மை என்னவென்றால் தூரத்தில் இருப்பவர்களோடு நெருக்கம் காட்டும் முயற்சியில் அருகில் இருப்பவர்களை மறந்துவிடுகிறார்கள்.

இந்த மூன்று வில்லன்களில் பெரிய வில்லன் யார் தெரியுமா? வாட்ஸ் அப்! ‘திருட்டு உறவுகளால் ஏற்படும் விவாகரத்துகளில் 40 சதவீதம் பேர் தங்களுக்கான ஆதாரங்களாக வாட்ஸ்அப் தகவல்களையும், படங்களையும் காட்டுவதாக’ இத்தாலி மேர்ட்டி மோனியல் லாயர்ஸ் அமைப்பு கூறுகிறது. பரஸ்பரம் நிர்வாணபடங்களையும், வீடியோக்களையும் அதன் மூலம் பரிமாறிக்கொள்கிறார்களாம்.

இந்தியாவில் 7 கோடிபேர் வாட்ஸ்அப் உபயோகிப்பதாக கணக்கு. அதிரடியாக இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இது மேலும் அதிகரிக்கும்போது பிரச்சினைகளும் பெருகும் என்பது நிதர்சனமான உண்மை. இன்று ஸ்மார்ட் போன்கள் பல ஆண்களுக்கு காதலி போலவும், ஏராளமான பெண்களுக்கு காதலர் போலவும் ஆகிவிட்டன.

ஒரே ஒருநாள் அது செயலிழந்து போனால்– வாட்ஸ்அப், பேஸ்புக் பார்க்க முடியாமல் போனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் சிலர் ஆகிவிடுகிறார்கள். இந்த கருத்துக்கு எதிரான கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. ‘வாட்ஸ் அப்பையும், பேஸ்புக்கையும் குறை சொல்ல வேண்டியதில்லை.

அதனை பயன்படுத்தும் நமக்குத்தான் கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. எல்லையோடு பயன்படுத்தினால் எல்லாமுமே நமக்கு நன்மைதான் தரும். முன்பு நாம் மொபைல் போனை குறை சொன்னோம். அதற்கு முன்பு கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் குறை சொல்லிக்கொண்டிருந்தோம். அதனால் பிரச்சினை என்பது அந்த கருவிகளிடம் இல்லை.

நம்மிடம் தான் இருந்து கொண்டிருக்கிறது’– என்கிறார்கள். இப்படி ஒரு கருத்து இருந்தாலும் ‘ரிசல்ட்’ என்னவோ சமூகத்திற்கு எதிராகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. பெங்களூரு நகரத்தில் நடந்த 5000 விவாகரத்து வழக்குகளில் 3000 வழக்குகளுக்கு காரணமாக அமைந்தது வாட்ஸ்அப், பேஸ்புக் விவகாரம்தான்.

அவைகளின் அளவுக்கு அதிகமான உபயோகம்தான் 3 ஆயிரம் குடும்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையிலும் கணவன்–மனைவிக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகளை இவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பிரச்சினை ஏற்படாத அளவுக்கு இந்த மூன்று வில்லன்களையும் நண்பர்களாக பயன்படுத்த முடியுமா?

முடியும்!

எப்படி?

உங்களது ‘நெட்’ நண்பர்களோடு உணர்வுரீதியாக மிகவும் நெருங்கிவிடாதீர்கள். எல்லாவற்றையும், எப்போதும் மனந்திறந்து பேசிவிடலாம்–திறந்து காட்டிவிடலாம் என நினைக்காதீர்கள். உடல்ரீதியான ரகசியங்களை பாதுகாக்க வேண்டியதுபோல், உணர்வு ரீதியான ரகசியங்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

தனது துணைவரிடம் பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களை கூட வாட்ஸ்அப் நண்பர்களிடம் பகிர்வதும், துணைவருக்கு கொடுக்கவேண்டிய நேரத்தை நெட் நண்பர்களுக்கு கொடுப்பதும் இல்லற இன்பத்தை இல்லாமல் ஆக்கி விடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது கணவன்– மனைவியாகிய அவர்களுக்குள் செக்ஸ் என்பது வேண்டாத விருந்தாளியாகவும், தேவைப்படாத கடைச்சரக்கு போலவும் ஆகி அவர்கள் உறவுக்கே உலைவைத்துவிடும்.

சிலர் ‘கணவரிடம் (அல்லது மனைவியிடம்) கிடைக்காத இன்பம் ஆன்லைன் பங்காளியுடன் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கிறது’ என்கிறார்கள். இந்த அளவுக்கு உணர்வுரீதியாக இந்த புதிய வில்லன்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. எல்லையோடு, இதனை பயன்படுத்தினால் ஏராளமான நன்மைகளை பெறலாம்!.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,732
Location
California
#2
Re: Whatsapp steals the life of Married women-பெண்களை துரத்தும் புதிய வில்லன்&#296

Shocking report!!!! Much needed awareness in this online social world.
 

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#3
Re: Whatsapp steals the life of Married women-பெண்களை துரத்தும் புதிய வில்லன்&#296

Good Information. thanx for sharing...

We must be Careful in all our deeds..
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#4
Re: Whatsapp steals the life of Married women-பெண்களை துரத்தும் புதிய வில்லன்&#296

Nice Info.
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#5
Re: Whatsapp steals the life of Married women-பெண்களை துரத்தும் புதிய வில்லன்&#296

NIce info..

Thanks for sharing........
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,725
Location
Madras @ சென்னை
#6
Re: Whatsapp steals the life of Married women-பெண்களை துரத்தும் புதிய வில்லன்&#296

Good Info friend.

:thumbsup​
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.