White Discharge problems & Remedies… வெள்ளை படுதல்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
வேதனை தரும்வெள்ளை படுதல்

பெண்கள் இந் நாட்டின் கண்கள் என்றார் பாரதி. ஒரு பெண்ணின் நலமே குடும்பத்தின் நலம் என்றார்கள் நம் முன்னோர்கள்.

பொதுவாக பெண்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுப்பது மாதவிலக்கும் வெள்ளைப்படுதலும் தான். அதில் வெள்ளைபடுதலைப் பற்றியும் அதன்பாதிப்புகளைப் பற்றியும் விரிவாக அறிவோம்.

பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்று. ஆனால் இந்த இயற்கையான சுரப்பிலிருந்து வெள்ளை படுதலுக்கு உள்ள வித்தியாசங்களை உணர்வது ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாகிறது. சாதாரணமாக இந்த சுரப்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படும். எப்படி வியர்வை சுரப்பு வித்தியாசப்படுகிறதோ அதுபோல. மாதவிலக்கு வந்து 10 லிருந்து 15 நாட்களுக்கு இந்த சுரப்பு அதிகமாகும். பின் திரும்ப மாதவிலக்கு வரும் 5 நாட்களுக்கு முன் சிறிது அதிகப்படும். இது இயற்கையானது. இது தவிர வெள்ளைப்படுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிப்பது. வெள்ளைப்படுதலுடன் பலஹீனம், இடுப்பு வலி, முதுகுவலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும்.இவை அனைத்தும் இருந்தால் வெள்ளைபடுதல் நோய் என்று உணரலாம்.

வெள்ளைப்படுதல் இருப்பது உணரப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

காரணம்:

வெள்ளை படுதலுக்கு நிறைய காரணங்கள் உள்ளன. சித்த மருத்துவத்தில் கூறப்படும் காரணம்,வெள்ளைப்படுதல் நோய் ஒருவருக்கு திடீரென்று ஒரு நாளில் வருவது இல்லை. பித்தம் மிகுந்து முன்னத்தண்டு கோர்வையை பற்றி குய்யம், மூலாதாரம் இவைகளில் கனல் மிகுந்து, நாடி, நரம்பு, ரத்தக்குழாய்கள் மூலமாக எலும்பைப் பற்றியும், சுரோணிதத்தில் கலந்தும், நீர்ப்பை, நீர்துவாரம் இவற்றில் ரணத்தையும் சூட்டையும் உண்டாக்கி சீழ் பிடித்து வலியுண்டாக்கி ஒழுக்கு ஏற்படும்.

அல்லது, சாதாரண நிலையில் உடல் இருக்கும்போது பிறப்பு உறுப்பை ஒட்டிக் காணப்படும் தசைப்பகுதிகளில் உட்புறச்சுவர்கள் வழுவழுப்பாக வைத்துக் கொள்வதற்காக உடல் கூற்றின் இயல்பான பல நிலைகளுக் காகவும் ஒரு திரவம் சுரக்கிறது. இத்திரவம் பட்டினி கிடத்தல், காரம், புளிப்பு, உப்பு நிறைந்த பொருட்களை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதாலும், மூலாதாரத்தில் வெப்பம் மிகுந்து தாது கேடு அடைவதாலும் அத்திரவம் அதிகளவில் சுரந்து வெள்ளை போக்காக மாறுகிறது.

தவறான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் அதிக நச்சுத்தன்மை உடலில் ஏற்படுகிறது. அவை தோல் மற்றும் வயிறு, நுரையீரல், சிறுநீரகங்கள் இவற்றின் மூலமாக வெளியேற்றப்படாமல் பெண்களின் கர்ப்பப்பை மூலமாக சளி சவ்வின் வழியாக வெளியேற்றப் படுகிறது.

இளம் வயது பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிவதால் அதிகம் ஏற்படுகிறது. மேலும் காம உணர்வு சுய இன்பம் காணுதல் இவைகளாலும் வெள்ளைப்படுதல் உண்டாகலாம். முறையாக மாதவிடாய் ஏற்படாத சில பெண்கள் மாதவிடாயை தூண்டும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் ஏற்படுகின்றது. சில பெண்கள் செயற்கையான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படும். கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண்களுக்கும், பால்வினை நோய்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவைகளின் அறிகுறியாகவும் இந்த நோய் ஏற்படலாம். அதிகமாக உடலுறுவில் ஈடுபடும் பெண்களுக்கும், கோபம், வருத்தம், வெறுப்பு மன உளைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும்.

திருமணமான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அடிக்கடி கருக்கலைப்பு செய்வது, கிருமி தொற்று ஏற்படுவது. குழந்தை பேற்றின் போது கருப்பையில் உள்ள அழுக்குகள் முழுமையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், கருப்பையில் புண், கட்டி முதலியன உண்டாகி வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: White Discharge problems & Remedies… வெள்ளை படுதல்

நோயின் அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்கள், உடல் கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக்கூடும். சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும் ஏற்படுவதுண்டு.

ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகியவையும் இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரியாக வராது. இரத்த சோகையுடன் உடல் மெலிந்து வறட்சி ஏற்பட்டு நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்பு வலி, வேலை செய்யும்போது இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.

நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டவுடன், தகுந்த மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து பின் மருந்து உட்கொள்ள வேண்டும்.

பாக்டீரியா மற்றும் கிருமியால் உண்டான வெள்ளைப்படுதல் என்றால் அதற்குரிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவத்தில் மூலிகைகளை கொண்டு குணப்படுத்த இயலும்.

மணத்தக்காளி சூப்

சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்

கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறை

· அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
· உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
· தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
· உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
re: White Discharge problems & Remedies… வெள்ளை படுதல்

[h=3]பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்![/h]பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.

கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும்.

இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
வகைகள்:

* உடல் மாற்றங்களால் ஏற்படுவது - Physiological Leucorrhoea (உதாரணம் உடலுறவிற்க்கு முன்பு, மாதவிடாய்க்கு முன்பு, காம உணர்வுகள் ஏற்ப்படும் போது)

* நோயால் அல்லது நோய்த்தொற்றால் - Pathological Leucorrhoea ஏற்படுவது வெள்ளைப் படுதல்.
* நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள்:

* பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்.

* வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் சுரத்தல்.

* முட்டை வெள்ளைக்கரு போலவோ, மோர் அல்லது தயிர் போன்று கட்டி கட்டியாக கூட படலாம்.

* சிலருக்கு தண்ணீர் போன்றோ, பால் போலவோ கூட இருக்கும்.


* வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுதல்.

* மிகுந்த எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல்

* வெள்ளைப் படுவதால் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாதல்.

* இடுப்பு வலி, முதுகு வலி.

* உடல் மெலிந்து போதல். இளைத்தல்.

* இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.

* உடல் மெலிந்து இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.

* உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.

* பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

* மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.

* இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்ப்பபை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.

* பொதுவாக ஒரு சில பெண்களுக்கு வயதிற்க்கு வந்த நாள் முதலே வெள்ளைப் படுதல் இருக்கும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
இந்த நோய் வருவதற்கான காரணங்கள்.

* தவறான உணவுப் பழக்கங்கள்.

* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.

* சுகாதாரமற்ற உள்ளாடைகள்.

* சுய இன்பம் காணுதல்.

* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.

* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.


* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.

* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.

* சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.

* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.

* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.


* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

* மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.

* எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
நோயைத் தவிர்க்க:

* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

* சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவு முறைகள்:

* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

* மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.

* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

* தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

* பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

* சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.


* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.* இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

* ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
.

* நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

* புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!

* மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.

* கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.

* புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.


* வேப்பமரப் பட்டை, பூ, வேர், காய், பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்!

* பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!

* உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
இது ஒரு வகை திரவமே... பயம் கொள்ள வேண்டாம்!

இது ஒரு வகை திரவமே... பயம் கொள்ள வேண்டாம்!

மெனோபாஸுக்கு பிறகு வெள்ளைப்படுதல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் அதிக கவனம் தேவை.மாதவிலக்கு என்பது எப்படி இயல்பானதோ, அதே போன்றதுதான் வெள்ளைப்படுதலும். அளவோடு இருக்கும் வரை எதுவுமே ஆபத்தில்லாதது என்கிற விதி இதற்கும் பொருந்தும்.பிறந்த குழந்தை முதல் மாதவிலக்கு முற்றுப்பெற்ற பெண்கள் வரை சந்திக்கிற இந்தப் பிரச்னையின் பின்னணி குறித்து விளக்கமாகப் பேசுகிறார் டாக்டர் நிவேதிதா.‘‘வெள்ளைப் போக்கு என்பது கர்ப்ப வாயிலிருந்து சுரக்கும் ஒருவகையான திரவம். இது மிகவும் சாதாரண ஒரு நிகழ்வு. ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன் சுரப்பது அதிகமானால், வெள்ளைப்போக்கின் அளவும் அதிகமாகும்.

எப்போதெல்லாம் வெள்ளைப்படும்?

*பூப்பெய்துகிற நேரத்தில்...
*கருமுட்டை வெளியாகும் நேரத்தில்...
*கர்ப்ப காலத்தில்...
*மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்படும் போது...
*நீரிழிவும் ரத்த சோகையும் இருந்தால்...
காரணம் என்ன?

அடிப்படையில் வெள்ளைப்படுதல் என்பது பெண்களுக்கான ஒரு பாதுகாப்பும் கூட. அதுவே அளவைத் தாண்டி, அசாதாரணமாகும் போதுதான் பிரச்னையாகிறது.வெள்ளைப்படுதலுக்கான மிக முக்கிய காரணம் இன்ஃபெக்ஷன் எனப்படுகிற தொற்று. இந்தத் தொற்று பல விதங்களில் தாக்கலாம்.இளம் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பதற்கான முதல் காரணம் சுயசுத்தமின்மை.

பெண்களுக்கு மலக்குழாயும் யோனிக் குழாயும் அருகருகில் இருப்பதால் கிருமித் தொற்று அடிக்கடி ஏற்படும். சிலவகையான சரும நோய்களாலும் தொற்றும் அதன் தொடர்ச்சியாக வெள்ளைப் போக்கும் வரலாம். அதிக வியர்வை, சரியாக சுத்தப்படுத்தப்படாத உள்ளாடைகளாலும் தொற்று தாக்கலாம்.

பால்வினை நோய் தொற்று, இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். எல்லாவிதமான பால்வினை நோய்களும் வெள்ளைப் போக்கை வரவழைக்கலாம். கொனேரியா, க்ளெமிடியா என்கிற இரண்டும் இந்த வகையான கிருமித் தொற்றில் குறிப்பிடத் தக்கவை. இந்தத் தொற்றானது கர்ப்பப்பை நரம்பு வழியே முதுகுத் தண்டு வரை பரவுவதால், வெள்ளைப் போக்கு மட்டுமின்றி, யூரினரி இன்ஃபெக்ஷன், அடி வயிற்று வலி, இடுப்பு மற்றும் முதுகு வலிகளும் வரலாம். திருமணமான பெண்கள் என்றால் அந்தரங்க உறவின் போது வலி இருக்கலாம்.

யோனிக் குழாய், கர்ப்ப வாய், கர்ப்பப்பை மற்றும் சினைக்குழாய்களைக் குறி வைக்கிற சில வகையான தீவிர பால்வினை நோய் கிருமிகளின் தொற்றாலும் வெள்ளைப் போக்கு வரக்கூடும். வயிற்றில் டி.பி. நோய் உண்டாகி, அதனால் உண்டாகும் தொற்று சினைக்குழாய்களை பாதிப்பதும் ரத்தத்தில் பரவுவதும் கூட இதற்கான காரணங்கள்.கர்ப்பப்பை, கர்ப்ப வாய் மற்றும் சினைக்குழாய்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் இருந்தாலும் புற்றுநோய் கட்டிகள் இருந்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும்.

இளவயதில் வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படுவோருக்கு பிற்காலத்தில் குழந்தையின்மை பிரச்னை வரலாம். 50 வயதைக் கடந்த பெண்களுக்கு வெள்ளைப்பட்டால், கட்டிகள் இருக்கிறதா என சோதிக்க வேண்டும். மெனோபாஸுக்கு பிறகு வெள்ளைப்படுதல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் அதிக கவனம் தேவை.

எப்போது சந்தேகப்பட வேண்டும்?

* துர்நாற்றத்துடனும் கெட்டியாகவும் மஞ்சள் நிறத்துடனும் இருந்தால்...
* வெள்ளைப் போக்குடன் வயிற்றுவலி, இடுப்பு வலியுடன் காய்ச்சலும் சேர்ந்து கொண்டால்...

சிகிச்சை?

வெள்ளைப் போக்கை எடுத்து மைக்ரோஸ்கோப் உதவியுடன் டெஸ்ட் செய்து, அதிலுள்ள கிருமியைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற மருந்து களைப் பரிந்துரைப்போம். சில நேரங்களில் அதை நீர்க்கச் செய்தோ, கல்ச்சர் டெஸ்ட் செய்தோ காரணத்தைக் கண்டறிய வேண்டி யிருக்கும். ஹார்மோன் மாறுதல்கள் ஏதேனும் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும். கிருமிக்கேற்ற மருந்துகளைக் கொடுத்து, பிரச்னை சரியானதும் மறுபடி டெஸ்ட் செய்து, அந்தக் கிருமிகளின் தாக்கம் நீங்கி விட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.