Who should pay the Income-tax?-வருமான வரி!

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,254
Likes
5,318
Location
Puducherry
#1
யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும்?

வருமான வரி கட்ட உங்களுக்கு வருமானம் இருக்கவேண்டும். வருமானம் இல்லாதவர்கள் வருமான வரி கட்டவேண்டியதில்லை.

சிலருடைய வருமானத்தை துல்லியமாக கணக்குப் போட்டுவிடலாம். மாத வருமானத்திற்கு வேலை பார்ப்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று மாதாந்திர சம்பள பட்டியலைப் பார்த்தால் தெரிந்துவிடும். இவர்கள்தான் நம் நாட்டின் அச்சாணி. இவர்களுக்காகத்தான் பெரும்பாலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களைப் பார்த்து பயப்படுபவர்களும் இவர்கள்தான்.

இவர்களுக்கான வருமானவரிச் சட்டம் என்ன சொல்லுகிறதென்றால், 60 வயதிற்கு உட்பட்ட குடிமக்கள், வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள், 2.5 லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கு, வருமான வரி செலுத்தவேண்டும். 60 முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள், 3 லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கு, வருமான வரி செலுத்தவேண்டும்.

80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள், 5 லட்சத்திற்கு மேல் வாங்கும் சம்பளத்திற்கும், வருமான வரி செலுத்தவேண்டும்.

வரி விகிதம் இவர்களுக்கு ரூபாய்க்கு பத்து பைசா மட்டுமே. இவர்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால் அந்த அதிக சம்பளத்திற்கு வரி ரூபாய்க்கு இருபது பைசா. சம்பளம் பத்து லட்சத்திற்கு மேல் இருந்தால் வரி ரூபாய்க்கு முப்பது பைசா. இதுதான் அதிகபட்ச வரி விகிதம்.

வருமானவரி சட்டத்தின்படி வருடம் என்பது ஏப்ரல் 1-ந்தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் மார்ச் 31-ந்தேதி முடிவடையும் வருடமாகும். இதை கணக்கு வருடம் என்பார்கள் அதாவது 'யுஉஉழரவெiபெ லுநயச" என்பார்கள். அதற்கு அடுத்த வருடத்தை 'யுளளநளளஅநவெ லுநயச" சுருக்கமாக 'யுலு"" என்பார்கள்.

நீங்கள் பிராவிடண்ட் பண்ட்டில் பணம் போட்டிருந்தால், மெடிகல் இன்சு+ரன்ஸ் செய்திருந்தால், டொனேஷன்கள் கொடுத்திருந்தால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வரி விலக்கு உண்டு.

சொந்தமாக வீடு கட்டியிருந்தால், அதற்கு கடன் வாங்கியிருந்தால், அந்தக் கடனின் வட்டிக்கு வரி இல்லை. வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வாடகைப் பணத்தின் ஒரு பகுதிக்கு வரி விலக்கு கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் யாராவது ஊனமுற்றிருந்தால் அவர்கள் பராமரிப்புக்கு என்று ஒரு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இப்படியாக இன்னும் பல விலக்கு உண்டு. அவைகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டியது நமது கடமைகளுள் ஒன்றாகும்.

பிரதமர் மோடி அவர்களின் பண மதிப்பை திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு பிறகு 'யாரெல்லாம் வரிசெலுத்த வேண்டும்" என்று கூகிளில் தேடியவர்களின் எண்ணிக்கை தோராயமாக 6 கோடி என்றால் நம்ப முடிகிறதா?., இந்த கட்டுரையின் வாயிலாக வருமான வரி தொடர்பான சிறு தகவலை உங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்,

உங்களுக்கு தேவையான முழுமையான தகவல்களை அரசின் அதிகாரப்பு+ர்வ வலைத்தளங்கள் மூலம் தெரிந்துகொண்டு, உங்களின் கடமையை செய்யுங்கள் ஒரு இந்திய குடிமகனாக!...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.