Why do Women wear Bangles?-பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
வளையல் என்பது பாரம்பரிய அணிகலனாகும். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல் ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்பொழுது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைப்பாடுகளை களைவதாகும்.

பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைப்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அக்காலத்தில் இறுதிவரை வளையல் அணிதல் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

அதிலும் கர்ப்பமான பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் வளைகாப்பு சடங்கு முக்கியம் பெறுகிறது நமது பாரம்பரியத்தில். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும். நன்றாக தூக்கம் வரும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கவும் உடல் சூடு தணியவும் இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
Re: பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

Valaiyalukkum harmonukkum eppadi link aagiradhu.

Valaiyalin ulogathalaa? Appadi endraal endha ulogam sirandhadhu?
Illai very edhaavadhu kaaranamaa?

konjam vilakinaal thevalai.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

very useful information! thank you!
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#4
Re: பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

good 1 sharing. . . . !
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
Re: பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

useful sharing thank you
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
உபயோகமான பகிர்வுக்கு நன்றி .
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#7
கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு பற்றிய சிறப்பு பார்வை...
ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும் வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும்...

நம்முடைய மற்றும் நமது
சமூதாயத்தின் நலன் கருதிதான் இருக்கும். இத்தகையகாரியங்கள் கர்ப்பிணி பெண் ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வை க்கும். எல்லாவித கொண்டாட்டங்களின் மத்தி யில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்பமாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.

வளையல், பாதுகாப்பு என்ற இரு வார்த்தைகளின் சங்கமமே வளைகாப்பு.இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் நடக்கும் ஒரு சடங்கு. இச் சடங்கு முன்பு இலங்கைத் தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லை. பல வருடங்களாக தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இச் சடங்கு கொண்டாடப்படுகின்றது.

கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்று ஆராய்சிசியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம். கர்ப்பமான பெண்ணின் வீட்டார்பலரையும் இந்த விழாவிற்கு அழைப்பார்கள். அவர்க ள் அப்பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்களை போட்டு விடுவார்கள்.

இதை தவிர வேறு பல கொண்டாட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக் காக நடத்தப்படும். இத்தகைய விழாக்களை கொண்டாடுவதில் ஏதேனும் அறிவியல் ரீதியான அர்த்தம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இவற்றை போலியான வை என்றும் கூறுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா…?வளையல் விழா:

எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம்.அதனால் தான் இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்,சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள்.

வளையல்க ளை கர்ப்பிணிகளுக்கு பரிசளிக்கும்போது அந்த வளையலின் சத்தம் குழந்தையை சென்றடைகின்றது. செவியைமட்டும் பயன்படுத்தி வெளியுலகை உணரமுடியும் தன்மையை கொண்ட சிசு இத் தகைய சத்தங்கள் கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்’ என் று கூறுகிறார். இதுதான் நமக் கு பிரசவத்தை எளிதாக்குகின்றது.


அன்னையின் சிறு அசைவினை கூட உணர்ந்து கொள்ளும் அதித சக்தியை ஆண்டவன் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டான் ,அதனால் தான் குழந்தையாய் சுமக்கும் பெண் நல்லதையே காணவேண்டும் ,சிந்திக்கவேண்டும் ஒரு அன்னையின் எண்ணம் எப்படி இருக்கிறதோ அதை பொருத்துதான் குழந்தையின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.
தான் உயிரை கொடுத்து இன்னும் ஒரு உயிருடன் உலகிற்க்கி திரும்பி வருகிறாள் ஒரு பெண், இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உடனிருக்கும் நாம்தான் உருவாக்கி கொடுக்கவேண்டும் .

நீங்கள் கர்ப்பமான பின்பு உங்களது அடுத்த தேடல் எவ்வாறு எளிதான முறையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது தான். கீழ்காணும் பகுதியில் அறிவியல் காரணத்துடன் செ ய்யப்படும் சம்பிரதாயங்களை பற்றி பார்ப்போம்: இவை எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகின்றது. padam படம்

பிரசவ இடம்: வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கு ம் என்று நாம் நம்புவ தை போல முதல் பிரச வத்தை தாய் வீட்டில் வைத்தால் அப் பெண் ணுக்கு பயங்கள் நீங்கி அவளின் எளிய பிரச த்திற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இது பிரசவத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

பயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். கரு கலைவ தற்கு வாய்ப்பு இருப்பதால் கடைசி மாதங்களில் செல்கின்றனர். அது மட் டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும். இது உடலுற வை தவிர்பதற்காக செய்யப்படும் முயற்சியாகும்.

இசையின் அற்புதங்கள்: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் நல்ல மெல்லிய இசையை கேட்டுக் கொ ண்டிருந்தால் இந்த மன அழுத்தத்தி லிருந்து அற்புதமாக தப்பிக்க முடியு ம். இது சிசு கேட்கும்திறனை அதிகரி க்கும். மிகவும் அதிகமான மன அழு த்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந் த எடை கொண்ட குழந்தைகள் பிற க்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளை யல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புகிறோம் அல்லவா, அப் போது நல்ல சத்தான உணவு ம் இதற்கு உதவும் என்று நம் புவோம். இந்த ஒரு காரியத் தை எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் பின்பற்ற வேண்டு ம். இவை எந்த ஒரு விழாவில் இல்லாவிட்டாலும் இதை பின்பற்ற வேண்டும்.

நெய் சாப்பாடு: இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல் லும்போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து பிரசவத் தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படட விஷயமாகும்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: எந்த ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்க ளாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக் கப்படுவாள். இவை அந் த பெண்ணை சந்தோ ஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக் கும். இது ஒரு முக்கிய மான ஆலோசனையா கும். இந்த சமயத்தில் மனதை அமைதியாக வைத்து உட லையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

உறவினர்கள் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய தொன்று. அதே சமயம் இச் சடங்கின் அர்த்தத்தையும் அறிந்திருத்தல் அவசியம் எனலாம்.

பெண் கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவள்.அதிலும் ஏழாம் மாதத்தின் பின் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு கர்ப்பச் சிதைவு ஏற்படுவதையோ ,உயிராபத்து ஏற்படுவதையோ தடுப்பதற்காக நம் முன்னோர் ஏற்படுத்தியதே இச் சடங்கு. இச் சடங்கு எப்போதும் பெண்ணின் பெற்றோர் இல்லத்திலேயே நடை பெறும். உறவினர்கள் வரவழைக்கப்படுவார்கள், வளையல்காரர் வருவார்,கர்ப்பிணிப் பெண்ணுக்கும் வந்திருக்கும் பெணகளுக்கும் வளையல்கள் அணிவிப்பார்.

வண்ண வண்ண வளையல்களை கையில் அடுக்கி அன்னையும் தந்தையும் கருவில் இருக்கும் குழந்தையிடம் என் செல்ல கண்ணா நீ வாழப்போகும் உலகில் இதுமாதிரி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து போராடவேண்டும் என்று அறிவிக்கும் நாளே சீமந்தம்,எனவே கர்ப்பிணி பெண்ணுக்கு சூடப்படும் கண்ணாடி வளையல்கள்அவள் கணவர் அன்பின் நிமித்தமோ, ஆத்திரத்தினாலோ அத்துமீறி நடந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில், உடைந்து காட்டிக் கொடுத்துவிடும்.
ஆனால், தற்காலத்தில் இத் தந்திரம் பலிக்காது. தற்போது போடப்படும் பிளட்டினம், தங்கம், பிளாஸ்டிக் வளையல்கள் உடைவதில்லை ! ஆக பெரிதாகப் பயனில்லை !இருந்தாலுமென்ன, வீட்டில் ஒரு சடங்கு பெரும் கொண்டாட்டமல்லவா ?

தாயின் கருவறையில் இருக்கும் போதே குழந்தை கேட்டல் திறனை விருத்தி செய்யத் தொடங்குவதாகவும் தாயின் குரல் என்பவற்றை அடையாளம் கண்டு கொள்வதாகவும் இவ்வாய்வு கூறுகிறது....! அதேவேளை உயர் அளவு சத்தங்கள் கருப்பைச் சுழலில் நுண் அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன் சிசுவின் கேட்டல் திறனையும் பாதிப்படையச் செய்ய சாத்தியம் இருக்கின்றது எனவும் குறிப்பாக அதிகம் இரைச்சல் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் இதனால் பாதிப்படைய சாத்தியம் இருப்பதாகவும் முன்னர் கருதப்பட்டது இருப்பினும் சிலவகை உயர் சத்த அலைகள் கருப்பைச் சூழலினால் வடிகட்டப்படுவதும் இவ்வாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....!

மிகப்பலகாலமாக இந்த பூமியின் பழங்குடி மக்களாகிய நாம் கடைபிடித்து வரும் சம்பிரதாயங்களை எல்லாம் பார்த்து அவற்றை பற்றி ஆராச்ச்ய் செய்யும் வெள்ளையர்கள் சில முடிவுகளைக் கூறுகிறார்கள். அவற்றை கொஞ்சம் வரிசைப்படுத்தினால் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ள சவுகரியமாக இருக்கலாம். இனி அவை!


1. கருவிலிருக்கும் போதே குழந்தைகள் சப்தங்களை கவனிக்கின்றது. அதீத சப்தத்தால் சில சமயங்களில் பாதிக்கப்படுவதும் உண்டு.

2. கருவிலிருக்கும் குழந்தையால் இசையைக் கேட்கமுடியும். ஒரு வயலின் வாசிப்பை விட ட்ரம்ஸ் வாசிப்பின் அதிர்வலைகளை குழந்தை எளிதில் உணர்கிறது.

3. கருவிலிருக்கும் குழந்தை தாயின் குரலையும் இதர சப்தத்தையும் சரியாக பிரித்துப் பார்த்து அறிந்து கொள்கிறது.

4. அமைதியான ஒரு இடத்தில் வாக்குவம் க்ளீனரின் சப்தம் முதல் பக்கெட்டில் தண்னீர் கொட்டும் சப்தம் வரை குழந்தையால் கவனிக்க முடியும்.

5. மனிதக் குரல்களின் மூலமாகவே வெளி உலகை குழந்தை பரிச்சியம் செய்து கொள்கிறது.

6. மற்ற சப்தங்களை விட தாய் மற்றும் தந்தையின் குரல்களை இயற்கையாகவே குழந்தை அடையாளம் கண்டு கொள்கிறது.

7. ஃப்ளாஷ் லைட் அடிக்கப்படும் போது குழந்தை அதனை எதிர் கொள்ளும் முகமாக அசைவதை ஆராய்ச்சிகளின் போது பல தாய்மார்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த கட்டுரையின் நோக்கம் :

இப்படி பல ஆராய்ச்சிகள் மூலம் வெள்ளையர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் விஷயங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் சடங்குளாக கடைபிடித்து கருவிலிருக்கும் போதே புதிதாக வரப்போகும் ஜீவனுடன் உரையாடி உறவாடிப் பழகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான்.

மாத தேதியில் வரவிற்கு அதிகமாய் பட்ஜெட் போட்டுவிட்டு அதைக் கிழித்து போடும் காகிதம் போலே, தேவையில்லை என கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல, அது ஒரு உயிர் நம்மோடு வாழ நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்து எல்லோரும் ஒன்றாகக் கூடிக் வரவேற்று மகிழ்வதே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு . எனவே நமது முன்னோர்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்....

நம்மாலே ஒரு அபிமன்யூவை உருவாக்க முடியாது போனாலும் வருங்காலத்தை ஆள நல்லதோர் மனிதனை உருவாக்கவேண்டும் ....

 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#8
Re: பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

Valaiyalukkum harmonukkum eppadi link aagiradhu.

Valaiyalin ulogathalaa? Appadi endraal endha ulogam sirandhadhu?
Illai very edhaavadhu kaaranamaa?

konjam vilakinaal thevalai.

ரதி ...இது acupressure போன்றதுதான் .

கைகளில் உள்ள நரம்பு போன்றவற்றை வளையல்கள் ஓரளவு அழுத்துவதாலும் , மேலும் கீழும் போய் வருவதால் உண்டாகும் உராய்வினாலும் ஏற்படும் அழுத்தம் , இந்த மாதிரி மேலே குறிப்பிட்டுள்ள உடல் நலக் குறைபாடுகளை களைய முடியும் .

இதற்கு உலோகம் என்பது முக்கியம் அல்ல .

எந்த வளையலாக இருந்தாலும் சரிதான் .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9
Superb sir.....:thumbsup
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#10
Re: பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

Excellent dangu sir.....​
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.