Wife's expectations from her husband-கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#2
Re: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன

Realistic expectation list Lakshmi
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
Re: Wife's expectations from her husband-கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என&#3

Absolutely....
 

saza

Friends's of Penmai
Joined
Apr 28, 2015
Messages
160
Likes
218
Location
kandy
#5
Re: Wife's expectations from her husband-கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என&#3

nice nd true shrng dear:thumbsup:thumbsup
 

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,281
Likes
2,984
Location
Singapore
#6
Re: Wife's expectations from her husband-கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என&#3

crt ah list potutenga,,,:thumbsupnice sharing...:)
 

SADAIYAN

Friends's of Penmai
Joined
Feb 7, 2014
Messages
174
Likes
268
Location
RAMNAD
#7
Re: Wife's expectations from her husband-கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என&#3

3. கோபப்படக்கூடாது. - இது மட்டும் சாத்தியமானால் அப்புறம் வாழ்கையே சொர்கமா போய்விடுமே. முயற்சி செய்கிறோம்

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. - இதுவும் எப்படி சாத்தியம். மனைவி தாய்க்கு மேலானவள். தாயை போல் சமைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாது போய் விடுகிறது. சரி அவர்களின் பக்குவம் பழகி போய் விட்டபின் குறைகள் அவ்வளவாக தெரிவதில்லை. ஆனால் மனித இயல்பு தவறு நேர்கிறது. எவ்வளவு மன பக்குவம் இருந்தாலும் அந்த நேர கோவத்தை தவிர்க்க முடியவில்லை. திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும் - பின்னே? மதிக்கத்தான் வேண்டும் ஆதரிக்கத்தான் வேண்டும். ஆனால் சில விஷயங்களில் அவர்கள் சற்றே தன்னிலை உயர்ந்து, ஒரு சார்பாக முடிவெடுக்கும்போது நாம் அங்கு நடுநிலையை கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு மாறுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். - நிச்சயமாக மறுக்காமல்.

 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.