Women fitness ---Tips,Tricks and workouts

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,201
Likes
3,170
Location
India
இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் சலபாசனம்

1527835266815.png

பெயர் விளக்கம்:
“சலப” என்றால் வெட்டுக்கிளி என்று பொருள். இந்த ஆசன நிலை வெட்டுக்கிளி போன்று தோற்றம் அளிப்பதால் சலபாசனம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

செய்முறை:
முதலில் அத்வாசனம் செய்ய வேண்டும். தலையை மேலே தூக்கி தாடையை தரைவிரிப்பின் மேல் வைக்கவும். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் நேராக நீட்டி வைத்து, பிறகு இடுப்பை தூக்கி இரண்டு கைகளையும் உடலுக்கு அடியில் வைக்கவும். உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும். கைவிரல்களை மடக்கியோ, நீட்டியோ வைக்கவும்.

மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி, கைகளை அழுத்தி இரண்டு கால்களையும் இணைத்தவாறு மேலே 45 டிகிரி அளவு வரை உயர்த்தி நிறுத்த வேண்டும். தொப்புளுக்கு கீழே இருந்து பாதம் வரைக்கும் உள்ள உடல் பகுதி அந்தரத்தில் இருக்க வேண்டும். முழங்கால்களை மடக்கக் கூடாது. இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 வினாடி இருந்து பிறகு, நிதானமாக கால்களை கீழே இறக்கவும். மூச்சை வெளியே விடவும். கால்கள் தரையில் படியும் வரைக்கும் முழங்காலை மடக்கக் கூடாது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்:
கீழ் முதுகு, அடிவயிறு, இடுப்பு, கைகள் மற்றும் தாடையின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு:
சிலருக்கு கால்களை மேலே உயர்த்தும் போது தலையும் சேர்ந்து மேலே தூக்கும். ஒரு சிலருக்கு இருகால்களையும் சேர்த்து மேலே தூக்க முடிவதில்லை. முயற்சி செய்யும்பொழுது முழங்கால்கள் மடங்கி கோணலாக அகன்று விடும். குதிகால்கள் ஒன்றாக சேராது. இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சரியான ஆசன நிலை வந்து விடும்.

தடைக்குறிப்பு:
இருதய பலஹீனம், உயர் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, குடல் புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

பயன்கள்:
ஜீரண கருவிகள் நன்கு செயல்படும். இடுப்பு நரம்புகள் வலுப்பெறும். பிறப்புறுப்புகள் ஆரோக்கியத்தோடு இருக்கும். நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, மூத்திரம் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
உடல் பருமனை குறைக்கும் யோகா

1528192031109.pngபொதுவாக உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.

உடல் எடையைக் குறைக்க ஆசனங்களுள் சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சி ஆகும். பிராணாயாமத்தில் சூரிய நாடியை நன்கு இயங்கச் செய்து (வலது நாசியில் மூச்சை அதிகமாக இயங்கச் செய்து) தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை லேசாக்கி சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.

ஹைபோதாலமஸில் உள்ள உணவு மையம், திருப்தி மையம் கட்டுப்பாடுடன் செயல்பட சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகளும், நாடி சோதனா போன்ற பிராணாயாம பயிற்சிகளும் தியானமும் உதவுகிறது.

தைராய்டு கோளாறினால் வரும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், ஹலாசனம், சிவலிங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகள் உதவுகிறது.
மருந்து, மாத்திரைகளினால் உடலில் உண்டான கழிவுகளை அகற்ற பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
இடுப்பெலும்பை உறுதியாக்கும் விஷ்ணு ஆசனம்

1528192180807.pngவிரிப்பில் வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும். இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும். கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும். இடது காலை மெல்ல மேலே தூக்கவும்.

காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும். பின் காலை கீழே கொண்டு வரவும். இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும். ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும். இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

பலன்கள்

இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
வார்ம் அப் செய்வதால் உடலுக்கு என்ன நன்மை

1528453737365.png

உடற்பயிற்சி, விளையாட்டு இப்படி உடலின் எந்த ஒரு தீவிர செயல்பாட்டுக்கும் முன்பாக நம் உடலை அதற்குத் தயார் செய்ய 'வார்ம் - அப்' செய்யவேண்டியது அவசியம்.

வார்ம் - அப், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்காக செய்யப்படுவது. இதில் ஸ்ட்ரெச்சிங் முக்கியமான ஒன்று. ஸ்ட்ரெச்சிங் செய்யும்போது உடலின் ஒவ்வொரு பகுதிகளிலும் ரத்த ஓட்டம் வேகமாகும். அதனால், தசைகளில் உள்ள அடுக்குகள் (Layers) திறக்கும். தேவையான அளவுக்கு ஆக்சிஜனும் கிடைக்கும். இதனை உடலைத் தூண்டும் பயிற்சிகள் என்று சொல்லலாம் (Golgi tendon stimulation). அதிக எடையான ஒரு பொருளைத் தூக்குவதற்கு முன்போ, அல்லது அதிக வேகத்தில் ஓடுவதற்கு முன்போ இதுபோன்ற ஸ்ட்ரெச்சிங் மிக அவசியம்.

வார்ம் - அப் செய்யும்போதே நம் உடல் வெப்பமாவதை நம்மால் உணரமுடியும். அந்த நிலை வரும்வரை நாம் தொடர வேண்டும்.உடற்பயிற்சி அப்போதுதான் அட்ரினலின் போன்ற பல ஹார்மோன்கள் சுரக்கும். 'அட்ரினலின்' மகிழ்ச்சிக்கான ஹார்மோன் ஆகும்.

'ஹேப்பி ஹார்மோன்ஸ்' சுரப்பதால் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்.

உடலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கரைந்து உடலுக்குத் தேவையான ஹார்போஹைட்ரேட் கிடைக்கும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் நேர்த்தியாக செய்யும் பழக்கம் உருவாகும்.

விரக்தி மனநிலை குறையும்.

நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.

தேவையற்ற கவலைகள், பயம், கெட்ட எண்ணங்கள், தேவையற்ற பதற்றம் குறையும்.

விழிப்புஉணர்வு, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வார்ம் - அப் செய்து முடிக்கும்போது மனதுக்கு திருப்தியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,201
Likes
3,170
Location
India
நீடித்த ஆயுளுக்கு தண்ணீர் ஆசனம்

1528695342304.png

யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட் களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும்படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.

கடல் நீர் நிரப்பிய நீச்சல்குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும்போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.

முன்னணி நலவாழ்வு மையம் ஒன்றின் நிறுவனர் நிகில் கபூர், இந்த யோகாசனத்தை மிக எளிமையாக செய்துவிடலாம் என்கிறார்.

‘‘தண்ணீர் யோகாசனமானது வலு, நிலைத்தன்மை, சமச்சீர், பல்வேறு அசைவுகள் என்று உடலின் அடிப்படைப் பணிகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் தற்போது பிரபலமாகிவருகிறது. யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம். வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது’’ என்று கூறு கிறார்.

தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்‌ஷா சனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்‌ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசை களுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாட்டைச் சேர்ந்த யோகாசன ஆர்வலரான பார்பரா ஹாஸ், தண்ணீர் ஆசனத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே இந்தியாவுக்குப் பறந்து வந்திருக்கிறார். இது உடல் ரீதியாக கொஞ்சம் சவாலான ஆசன முறை என்பது அவரது கருத்து.

‘‘இதில், சுவாசம் மற்றும் உடல் வலுவால் நமது சமநிலையைப் பராமரிப்பதுடன், தண்ணீர் இயக்கத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாகத் தோன்றிய இது, போகப் போக சவாலாக மாறியது. ஆனால் இதைச் செய்துமுடிக்கும்போது, வெற்றிகரமான, மனமார்ந்த பயிற்சியாகத் தோன்றுகிறது. தரையில் செய்வதைவிட தண்ணீருக்குள் ஆசனம் செய்யும்போது கடினமாகத் தோன்றினாலும், முழு உடம்புக்கும் நல்ல பயிற்சி ஆகிறது’’ என்று பார்பரா கூறுகிறார்.தண்ணீர் ஆசனம் போலவே, தண்ணீர் மீது மிதக்கும் பலகை மீது செய்யும் ஆசனமும் பிரபலமாகி வருகிறது.

இதுபற்றி நிகில் கபூர், ‘‘நீங்கள் யோகாசனத்தில் தேர்ந்தவராக இருந்தாலும் சரி, இப்போதுதான் தொடங்குகிறவராக இருந்தாலும் சரி, தண்ணீரில் மிதக்கும் பலகையில் கை வைத்ததுமே, இது வேறு மாதிரி என்று உணரத் தொடங்கிவிடுவீர்கள்’’ என்கிறார்.

அலைச்சறுக்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தண்ணீர்ப் பலகை யோகாசனம் பிடிக்கும் என்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போல வெளிநாட்டவரும் அலைச்சறுக்குப் பிரியருமான மேரி டைசியாக், தான் இந்தியா வரும்போது இந்த யோகாசனத்தை கற்க இருப்பதாகக் கூறுகிறார்.

‘‘நான் இதை தண்ணீரில் செய்து பார்த்தபோது, எதிர்பார்த்ததைவிட கடினமாகவே இருந்தது. ஆனாலும் நான் அதை ரசித்தேன். தண்ணீரில் மிதந்தபடி ஆசனங்களைச் செய்வதற்கு உடம்பின் அனைத்து தசைகளையும் பயன் படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது உடம்புக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் என உணர முடிகிறது’’ என்று சொல்கிறார்.

‘‘மிதக்கும் பலகையில் ‘பேலன்ஸ்’ செய்து ஆசனங்களை மேற்கொள்ளும்போது தசைகளின் வலுவையும் தன்மையையும் மேம்படுத்துகிறது, தசைப்பிடிப்பு தன்மையைக் குறைக்கிறது’’ என்றும் பயிற்சி பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

தண்ணீர் யோகா சனத்தைப் போலவே, ஜும்பா நடன அசைவுகளை தண்ணீருக்குள் மேற்கொள்ளும் அக்வா ஜும்பாவும் யோகாசனப் பிரியர்களை கவரத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மாலத்தீவில் உள்ள ஒரு ரிசார்ட் செய்தித்தொடர்பாளரான தீவிகா நிஜாவன் கூறும்போது, ‘‘அக்வா ஜும்பாவை தண்ணீருக்குள் மேற்கொள்ளும்போது தண்ணீரின் எதிர்ப்புத்தன்மையானது தசைத் திரட்சியை அதிகரிக்கவும், உடம்பின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் நெகிழ்வுத்தன்மையைக் கூட்டவும் உதவுகிறது’’ என்று சொல்கிறார்.

இனியென்ன, தண்ணீரில் தாராளமாய் மிதக்கலாம்! நீடித்த ஆயுளுடன் வாழலாம்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,201
Likes
3,170
Location
India
ட்ரெட்மில்லில் பயிற்சி செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம் - செய்யக்கூடாது?

1528785299199.png

நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு. ஆனால், இதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்தினால்தான் அதன் நன்மைகளைப் பெற முடியும். ட்ரெட்மில்லில் பயிற்சி செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

``ட்ரெட்மில் பயன்படுத்தும்போது, டிரெஸ்ஸிங் சரியாக இருக்க வேண்டும். வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. சரியான ஷூ, ஷாக்ஸ், டி-ஷர்ட், ட்ராக்ஸ் அணிந்திருக்க வேண்டும். பயிற்சி செய்யும்போது, உடலும் மனதும் ரிலாக்ஸாக இருக்கவேண்டியது அவசியம்.

* ட்ரெட்மில்லில் நடக்கும்போது, வியர்வையைத் துடைத்துக்கொள்ள பக்கத்திலேயே ஒரு துண்டு வைத்துக்கொள்வது நல்லது. ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்பவர்கள், இதைக் கண்டிப்பாகப் பின்பற்றவும்.

* முதன்முதலாக ட்ரெட்மில் உபயோகிப்பவர்கள், வேகத்தை எப்படிக் கூட்டிக்கொள்வது அல்லது குறைப்பது, எமெர்ஜென்சி ஸ்டாப் எப்படிச் செய்வது, பாடல் கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது எப்படி என்பதையெல்லாம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

* ட்ரெட்மில்லின் ப்ளஸ், அதன் டிஜிட்டல் திரை. ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறீர்கள், பயிற்சியால் உடலில் எவ்வளவு கலோரிகள் கரைந்திருக்கின்றன, இதயத்துடிப்பின் வேகம் எவ்வளவு இருக்கிறது போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.

* உடல் பருமனாக இருப்பவர்கள், ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சியை ஆரம்பிப்பதுச் சிறப்பு. காரணம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள், மிக உறுதியாக இருக்கும்.

* பயிற்சி செய்யும்போது வெளியேறும் வியர்வை, பயிற்சியை முடிக்கும்போது டீஹைட்ரேஷன் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்’’.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரம் தேவை

1529019273314.png

உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கான சில குறிப்புகள் :

* ஜிம்முக்குச் செல்லும் முன்பு உங்களை ஒழுங்காக சுத்தம் செய்துகொள்ளுங்கள், குறிப்பாக அலவலக வேலை நேரத்திற்குப் பிறகு ஜிம்முக்குச் செல்வதாக இருந்தால் இது முக்கியம். ஜிம்முக்குச் செல்லும் முன்பு குளித்துவிட்டு, பெர்ஃப்யூம் போட்டுக்கொள்ளுங்கள், அதே சமயம் அதிகமாக போடக்கூடாது.

* எப்போதும் தளர்வான மற்றும் வசதியாக இருக்கும் உடைகளை அணியுங்கள். காட்டன் உடை அல்லது வியர்வையை ஆவியாக்கும் உடைகளை அணிந்துகொள்வது நல்லது.

* உராய்வு ஏற்படும் பகுதிகளில் (உதாரணம். தொடை இடுக்குப் பகுதிகள், அக்குள்) பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துதல் போன்ற சிறப்பு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவ வேண்டும். எப்போதும் ஹேன்ட் சானிட்டைசரை உடன் வைத்திருப்பது நல்லது.

* உடற்பயிற்சி செய்யும்போது வியர்க்க வேண்டும், அது அவசியம். அதற்காக, வியர்வையால் நனைந்த உபகரணங்களைப் பயன்படுத்த யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே வியர்வையைத் துடைப்பதற்காக ஒரு சுத்தமான டவலை எடுத்துச் சென்று, உடற்பயிற்சி செய்து முடித்ததும் உபகரணங்களை துடைப்பது முக்கியமாகும்.

* உங்கள் உடலில் உள்ள நீரின் அளவைப் பராமரிக்க, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு நீர் அருந்துவது மிகவும் முக்கியமாகும். பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மெட்டல் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்களை கிருமி நீக்குவது கடினம் என்பதால், அதில் கிருமிகள் அதிகம் சேரும். மெட்டல் பாட்டில்களை சோப்பு மற்றும் கொதிக்கும் நீரைக்கொண்டு கிருமி நீக்கிவிடலாம். மேலும், நீங்கள் பார்க்காதபோது, யாரவது உங்கள் பாட்டிலில் இருந்து நீர் அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* உங்கள் ஜிம் ஷூவை மறந்துவிடாதீர்கள் - ஜிம் பையில் அவற்றைப் போடுவதற்கு முன்பு பிளாஸ்டிக் பையில் சுற்றிக்கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்த பிறகு, கிருமி நீக்கும் வைப்ஸைக் கொண்டு கிருமி நீக்கி, காற்றில் உலர வைத்தால், அடுத்த நாளிற்கு அவை தயாராகிவிடும்! உங்கள் ஷூவில் உண்டாகும் நாற்றத்தைத் தவிர்க்க, இரவு முழுவதும் ஷூவின் உட்பகுதியில் தேயிலைப் பைகளை வைக்கலாம்.

* உடற்பயிற்சி முடித்துவிட்டு வரும்போது, சோஃபாவைப் பார்த்ததும் உட்கார்ந்து ஓய்வெடுக்க மனம் ஏங்கும்! ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குளிக்கச் சென்றுவிடுங்கள், ஆனால் அதற்கு முன்பு உங்கள் உடல் குளிர்ச்சியடைய வேண்டும், அது வரை காத்திருந்து அதன் பிறகே குளிக்க வேண்டும்.

* உங்களுக்கு இருமல், தும்மல் அல்லது மூக்கு ஒழுகுதல் எதாவது இருந்தால் ஜிம்மிற்குச் செல்ல வேண்டாம். ஜிம்மிற்கு செல்லாமல் இருப்பது உங்கள் உடல் குணமடைய உதவும், மேலும் மற்றவர்கள் உங்களால் பாதிப்படைவதையும் தடுக்கும் ஏதேனும் திறந்த காயங்கள் இருந்தாலும் மேற்கூறியது பொருந்தும்.
 
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
பீரியட்ஸ் தொந்தரவா? - எளிய பயிற்சிகளால் எதிர்கொள்ளலாம்!

பீரியட்ஸ் நேரங்களில் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது என்றொரு கருத்து நிலவுகிறது. அந்த நாள்களில் உடல் அசதி, அசெளகரியம், உடல் வலி போன்றவை ஏற்படும். அவற்றைக் குறைக்க மருந்து மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடு எனப் பல வழிகளில் முயற்சிகள் செய்வோம். ஆனால், எளிய உடற்பயிற்சிகளின் மூலமாகவும் அவற்றைச் சரிசெய்யலாம். பீரியட்ஸ் தொந்தரவுகளில் இருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள் இங்கே...

ஆங்கிள் டச் (Ankle Touch)

விரிப்பில் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். இடது காலை மட்டும் முன்புறமாக நீட்ட வேண்டும். இப்போது உடலை வளைத்து, வலது கையால் இடது கால் பெரு விரலைத் தொட வேண்டும். இந்த நிலையில் இடது காலின் முட்டி மடங்கக் கூடாது. இதேபோன்று வலது காலுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும்.

பலன்கள்:
கால் தசைப்பிடிப்புகள் நீங்கும். இடுப்புப் பகுதியில் உள்ள தசைப் பிடிப்புகள் சரியாகும். மாதவிடாயின்போது ஏற்படும் முதுகு வலி மற்றும் வயிற்றுவலியைக் குறைக்கும். கை, கால்களின் சீரான இயக்கத்துக்கு உதவும்.
 
Joined
Jul 5, 2011
Messages
104,922
Likes
20,802
Location
Germany
ஹெட் டு நீ (Head to Knee)

விரிப்பில் நேராக நின்று கொண்டு இடது காலை இரண்டு அடி முன் எடுத்து வைத்து, கைகளை நீட்டி ஒன்றாகக் கோத்துக்கொள்ளவேண்டும். பிறகு மெதுவாகக் குனிந்து கால்முட்டியைத் தலையால் தொட முயற்சி செய்ய வேண்டும். இந்த நிலையில் கால் முட்டி மடங்காமல் இருக்கட்டும். பின்பு, பழைய நிலைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும்.

பலன்கள்:
மனஅழுத்தத்தைக் குறைக்கும். மூளைப் புத்துணர்வு பெற உதவும். முதுகுத்தண்டு, தோள்பட்டை, கை மற்றும் தொடைப் பகுதிகளில் உள்ள தசைப் பிடிப்புகளை நீக்கும். கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும். மாதவிடாயின்போது ஏற்படும் அசெளகரிய உணர்வை நீக்கும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.