Women fitness ---Tips,Tricks and workouts

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
பட்டர்ஃப்ளை போஸ் (Butterfly pose)

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வைக்க வேண்டும். கால்களின் பாதங்கள் உள்புறமாக ஒட்டியிருக்கும்படி வைத்துக் காலை மடக்கிக்கொள்ள வேண்டும். (பட்டர்ஃப்ளை போன்று வைக்க வேண்டும்.) இந்தநிலையில் 30 விநாடிகள் இருக்கலாம். பின்பு, பழைய நிலைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும்.

பலன்கள்:
தொடைப் பகுதியில் உள்ள தசைப்பிடிப்பை நீக்கும். உடலின் வளைவுத் தன்மையை (Flexibility) மேம்படுத்தும். மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலியைக் குறைக்கும். மனச்சோர்வு, மனஅழுத்தத்தைக் குறைக்கும்.
 
vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
கேமல் போஸ் (Camel Pose)

வஜ்ராசன நிலையில் அமரவேண்டும். பிறகு கைகளைப் பின்புறமாகக் கொண்டு சென்று குதிகாலைத் தொட வேண்டும். இப்போது சற்று எழுந்து, உடலை நன்கு வளைத்துத் தலையைப் பின்புறமாகக் கொண்டு செல்ல வேண்டும். பின்பு, பழைய நிலைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும்.

பலன்கள்:
உடல் எடையைக் குறைக்க உதவும். முதுகு மற்றும் இடுப்புப் பகுதியை வலுப்படுத்தும். உடலின் தோற்றத்தை மேம்படுத்தும். முதுகு, தோள்பட்டை மற்றும் தொடைப் பகுதியில் உள்ள தசைப்பிடிப்புகள் நீங்கும். சுவாசத்தை மேம்படுத்தும்.
 
vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
பிக் டோ போஸ் (Big Toe Pose)

விரிப்பில் நேராக நிற்க வேண்டும். அதன்பிறகு கைகளுடன் சேர்த்து உடலையும் ஒரே சீராக மெதுவாகக் கீழே இறக்க வேண்டும். இப்போது கைகளை, கால்களின் விரலுக்கு அடியில் வைக்க வேண்டும். இந்த நிலையில் கால் முட்டிகள் மடங்கக் கூடாது. பின்பு, பழைய நிலைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள்:
கால் தசைப் பிடிப்புகள் நீங்கும். கால் முட்டியை வலுப்படுத்த உதவும். மாதவிடாயின்போது ஏற்படும் முதுகு வலி மற்றும் வயிற்றுவலியைக் குறைக்கும். செரிமானத் தன்மையை மேம்படுத்தும்.
 
vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
ஆர்ச்சிங் பிஜியன் (Arching Pigeon)

வஜ்ராசன நிலையில் அமரவேண்டும். இடது காலைப் பின்புறமாக நீட்ட வேண்டும். வலது கால் மடக்கிய நிலையிலேயே இருக்கட்டும். சற்று முன்புறமாகக் குனிந்து, கைகளை முன்புறம் நீட்டித் தரையில் அழுத்தமாகப் பதிக்க வேண்டும். இப்போது, கைகளைப் பக்கவாட்டில் கொண்டு சென்று, உடலைப் பின்புறமாக முடிந்த அளவு வளைக்க வேண்டும். தலை நிமிர்ந்த நிலையில் இருக்கட்டும். பின்பு, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல் வலது காலுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவேண்டும்.

பலன்கள்:
உடலின் வளைவுத் தன்மையை (Flexibility) மேம்படுத்தும். முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கால் வலியைக் குறைக்கும். தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள தசைப்பிடிப்புகள் நீங்கும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகப் பாயும்.
 
vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,452
Likes
20,836
Location
Germany
ரிலாக்ஸ் (Relax)

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். கண்கள் மூடியபடி இருக்கட்டும். தலை, முதுகுத் தண்டு, இடுப்பு மற்றும் கால்கள் தரையைத் தொடுமாறு படுக்க வேண்டும். மூச்சைச் சீராக இழுத்து விடவும். இந்த நிலையில் 30 விநாடிகள் இருக்கவேண்டும்.

பலன்கள்:
உடல் முழுவதும் சீரான ரத்தம் பாய உதவும். கை மற்றும் கால்களில் உள்ள வலிகள் நீங்கும். முதுகு வலி, தோள்பட்டை வலி மற்றும் இடுப்பு வலியைக் குறைக்கும். உடல் முழுவதும் சீரான சுவாசம் பரவ உதவும்.
 
Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
556
Location
chennai
உயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்

1529493305692.png

உயரம்…, பலர் வாழ்க்கையை கேலி, கிண்டலுக்கு ஆளாக்கும் ஓர் விஷயம். உயரம் கம்மியாக இருந்தாலும் கேலி செய்வர்கள், உயரம் அதிகமாக இருந்தாலும் கேலி செய்வார்கள். உயரம் அதிகமாக இருந்தால் கூட கேலி செய்பவர்களை தலையில் தட்டி ஓட வைத்துவிடலாம். ஆனால், உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

சரி, இனி உயரம் அதிகமாவதற்கு உதவும் சிறந்த உடற்பயிற்சிகள் குறித்துக் காணலாம்….

நீச்சல்

நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது நீங்கள் சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

தொங்குவது

இதை நீங்கள் பெரும்பாலும் கேள்விப்பட்டிருகலாம், ஏன் நேரில் கூட கண்டிருக்கலாம். இது உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உங்கள் உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

இடுப்பை உயர்த்துதல்

கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி உங்கள் உயரம் அதிகரிக்க சிறந்த முறையில் உதவும்.

ஸ்கிப்பிங்

உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.

கால்களை மேல் உயர்த்துதல்

நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்ய உதவும். ஒரே நாளில் இந்த பயிற்சியை சரியாக செய்வது கடினம் தான், எனவே, தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

பிலேட்ஸ் பயிற்சி (Pilates Roll Over)

தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்தல் வேண்டும். இது உங்கள் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக உதவும். இதனால், நீங்கள் சீரான முறையில் உயரமாக முடியும்.
 
Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,432
Likes
556
Location
chennai
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு உடற்பயிற்சிகள்

1529576894104.png

பொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால் நுரையீரல் உற்சாகமாக இருக்கும். உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஜிம்மில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஜிம்மில் தொடக்க நிலையில் ஒட்டுமொத்த உடலையும் வலுவாக்குவதற்கான பயிற்சிகள் மட்டும்தான் சொல்லித் தரப்படும். பிற்பாடு தோள்பட்டை, கைகள், இடுப்பு, தொடைப்பகுதி, கால்கள் என உடலின் ஒவ்வொரு உறுப்பையும் முறுக்கேற்றி, வலுவாக்குவதற்கான பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் ஜிம் ட்ரெய்னரின் ஆலோசனையுடன் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம். சில வகைப் பயிற்சிகள் காம்போவாக இருக்கும்.

அதாவது இந்தப் பயிற்சியை செய்தால் இன்னொரு பயிற்சியையும் செய்ய வேண்டும் என்பதாக இருக்கும். இன்னும் சில பயிற்சிகள் எதிரெதிரானதாக இருக்கும். குறிப்பிட்ட பயிற்சியால் ஏற்படும் அதீத விளைவை அல்லது எதிர்விளைவைக் கட்டுப்படுத்த இந்த பயிற்சியை செய்ய வேண்டும் என்பதாக இருக்கும். எக்ஸ்பர்ட்களுக்குத்தான் இது குறித்து நன்கு தெரிந்திருக்கும். எனவே, ஒவ்வொரு உறுப்புக்குமான பிரத்யேகப் பயிற்சிகளை உரிய நிபுணர்கள் ஆலோசனையுடன் செய்வது நல்லது.

நம் உடலின் மொத்த எடையையும் தாங்குவன கால்கள்தான். இடுப்புக்கு மேலே என்னதான் வொர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்து, கட்டுமஸ்தாக உடலைப் பராமரித்தாலும் கால்களுக்கு அதைத் தாங்கும் அளவுக்குத் திறன் வேண்டும். எனவே, கால்களுக்கான பிரத்யேகப் பயிற்சிகள் செய்ய மறக்க வேண்டாம். வாக்கிங், ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங், நீச்சல் பயிற்சிகள் கால்களை வலுவாக்குகின்றன. இதைத் தவிரவும் ஜிம்மில் கால்களையும் தொடைப்பகுதிகளையும் வலுவாக்குவதற்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகள் உள்ளன. ட்ரெய்னரின் ஆலோசனையுடன் அந்தப் பயிற்சிகளையும் செய்வது நல்லது.
 
lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,805
Likes
4,147
Location
villupuram
Weight loss tips:

  • Cooking with coconut oil: studies have shown that the consumption of coconut oil has beneficial effects on the human body, as it helps boost metabolism and can also help reduce one’s appetite so you don’t go eating more in a day. Using the coconut oil in your meal entails replacing your unhealthy cooking oil with coconut oil.
  • Drinking black coffee: the caffeine contained in the coffee we drink has metabolism boosting properties which can increase the metabolism by 3 to 11 percent and also increase the burning of body fat up to 29 percent. When drinking, be sure not to add sweeteners and stuff, which would just defeat the whole aim and idea of losing weight.
  • Glucomannan Supplement: this is a natural fiber supplement that is made from the roots of the Konjac plant which is used to aid weight loss, since it gets into the belly and absorbs water, thereby helping get rid of water weight. It is also used to treat diabetes and constipation.
  • Eat with small plates: eating with small plates would give your brain the impression that you have eaten your normal food ration. This works a great deal, and when it is done over time, and mastered, you would be totally satisfied by eating a smaller ration of food as opposed to the bigger ration you used to eat.
  • Go spicy: consume food with plenty spice in them, they have properties that boost metabolism. Ever eaten food that contains a lot of pepper in it? Watch how you sweat and how your nose begins to bring out water. That’s because the pepper has heated up your inside and that’s fat giving way right there.
  • Lift weight: weight training is known to be a good metabolism booster. It is also known that the more muscles you put on, the more fat you shed, so gaining muscles, in this case, would be a good idea. I didn’t mean you’ll have to turn into a professional bodybuilder, but before you would have toned your body enough to start getting worried of too much muscles, your weight would have come down reasonably well.
  • Brush your teeth after your last meal: brushing one’s teeth gives that feeling of “am closed for the day” and you sort of feel satisfied with how your mouth smells and wouldn’t want anything to get in there and cause dirt to an already washed mouth. It is psychological, it works and you should give it a try.
 
fitness = weightloss !!
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.