Work, Home, Multiple Roles and Stress - - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிர&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பிரச்னை



வேலை, வீடு என இரட்டைச் சுமையில் தவிக்கும், எல்லாப் பெண்களுக்குமான பொது பிரச்னை, மன அழுத்தம். குடும்பத்துக்காக வேலையையோ, வேலைக்காக குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த பெண்களுக்கு, தம்மை கவனித்துக் கொள்ள, நேரம் ஒதுக்குவது அரிதாகிவிடுகிறது.

முடியலையே... எனப் புலம்பிக் கொண்டாவது, எல்லா வேலைகளையும் முடித்து விடும் பலருக்கு தெரிவதில்லை, அது ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தத்தின் ஆரம்பம் என்பது. இதை தொடர விட்டால், பல்வேறு மனபாதிப்புகளுக்கு, சிவப்பு கம்பளம் விரிப்பது போலாகிவிடும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தம்மால் முடியவில்லையே என்கிற நினைப்புதான், அழுத்தத்தின் ஆரம்பம். குடும்பத்தில், மனைவியாக, தாயாக, பணிபுரியும் இடத்தில் நல்ல வேலையாளாக திறம்பட செயல்பட முடியாத போது, புலம்பல்கள் அடிக்கடி வந்தால், மன அழுத்த குகைக்குள் சிக்கி கொண்டதை அறியலாம்.

படபடப்பு, அழுகை, கோபம், எரிச்சல், தூக்கமின்மை, அதீத பசி போன்றவை ஸ்ட்ரெஸ்சின் அறிகுறிகள். வேலையையும் வீட்டையும் கவனிக்கிற, ஒவ்வொரு பெண்ணுமே, அசாதாரண மனுஷிதான். இரண்டு இடங்களிலும், எல்லா விஷயங்களிலும், நூறு சதவீத பர்பெக்சனை எதிர்பார்க்க ஆரம்பிக்கும் போதுதான், ஸ்ட்ரெஸ் வருகிறது.

சமாளிக்க உத்திகள்: வீடு, வேலை என, இரண்டுக்கும் 50:50 முக்கியத்துவம் கொடுக்க பழகுங்கள். நிதான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
வேலையை, திறமைக்கான ஒரு வடிகாலாக பாருங்கள். படித்திருந்தும், வீட்டில் முடங்கி கிடக்காமல் இருப்பதற்கு, வேலை செய்வது ஒரு ஆறுதல்.

இதற்காக வேலை, வேலை என எந்நேரமும், அதைப் பற்றிய சிந்தனையில் ஓடுவதையும், அதிகமாக சம்பாதிக்க நினைப்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கான கனவு என்கிற, அதிகபட்ச ஆசைகள் தேவையில்லை. அந்த ஆசைகளை தேடி ஓட ஆரம்பித்தால், நிச்சயம் ஸ்ட்ரெஸ்சை சந்தித்தாக வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, அதிகபட்ச கால ஒழுக்கம் அவசியம். உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, அக்கம் பக்கத்து வீட்டாருக்கு, எத்தனை மணித்துளிகளை ஒதுக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கோ, ட்விட்டரோ, டிவியோ, வேலைக்குச் செல்கிறவர்களின் களைப்பை நீக்கி புத்துணர்வு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, உலகத்தை மறக்கும் அளவுக்கு, அதிலேயே மூழ்கக்கூடாது.

வேலையிடத்தில் கூடியவரை வம்பு பேசுவதோ, அரசியல் பேசுவதோ வேண்டாம். சிலவிதமான அலுவலக அரசியல்கள், ஸ்ட்ரெஸ்சை அதிகரித்து, ஒரு கட்டத்தில், அந்த வேலையிலிருந்தே விலகி ஓடச் செய்து விடும்.

வேலையிடத்தில் செலவழிக்கிற நேரத்தை, ஆக்கப்பூர்வமாக செலவழித்தால், வேலை நேரம் முடிந்தும், அலுவலை முடிக்க முடியாமல் உண்டாகிற, டென்ஷன் இருக்காது.

இதை புரிந்து கொண்டு, வீட்டையும், வேலை பார்க்கும் தளத்துக்கான முக்கியத்துவத்தையும் எடை போட்டு பிரித்தாள தெரிந்தவர்களுக்கு, எத்தகைய பிரச்னைகளில் இருந்தும் விடுபட, வழி கிடைக்கும்.



 
Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#2
re: Work, Home, Multiple Roles and Stress - - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பி&#299

இன்றைய வாழ்வியல் முறையில் பலரும் சந்திக்கும் பிரச்சனையை இதுவே. நன்றி லக்ஷ்மி பகிர்வுக்கு.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
Re: Work, Home, Multiple Roles and Stress - - பெண்கள் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் பி&#299

@chan., lkashmi dear, nice post....

As a psychological counsellor,

I normally advise students not to indulge more in any social networks..
even video games are becoming great addiction today. i know a student who is doing the movement of his fingers on cell even while sleeping !!!!


stress is something what we invite....

when the mind is calm no external forces can affect you....

according to me, leave the wrok problems at work... and leave the home problems at home....

naan naan aagvae iruppaen... engum.. eppodhum...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.