World Breastfeeding Week Celebration - Inviting you all Penmai Friends!!!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் அகஸ்ட் முதல் வாரமான 1-7 வரை, தாய்ப்பாலின் அருமைகளை விளக்க கொண்டாடப்படுகிறது. உலகில் விலைமதிப்பற்ற குழந்தைகளுக்கான பொக்கிஷம் தாய்ப்பால்.

breastfeeding week.jpg
இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும், தன் குழந்தைக்குத் தாய்ப்பால் தராமல் மறுப்பதில்லை... வேறுபால் தருவதில்லை... வழக்கம்போல் மனிதர்கள் இயற்கை விதித்த நியதியை மறந்து தன் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் ஊட்டுவதை சிலர் புறக்கணிக்கிறார்கள். புட்டிப்பாலும், பவுடர் பாலும் தர முடியாத ஆரோக்கியத்தையும், வலிமையும், பாச உணர்வையும் புகட்டுவது தாய்ப்பால்.

தாய்ப்பாலின் மகத்துவம் - ஆறறிவுடைய மனிதகுலத்தில் குறைந்து வருகிறது! ஐந்தறிவுடைய மிருகங்களிடையே வளர்ச்சியடைந்துள்ளது!!!

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 1-7ம் தேதி வரை சென்னையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊட்டச்சத்து வாரியம் & மேத்தா குழந்தைகள் மருத்துவமனையும் இணைந்து தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யதுள்ளனர். அவர்களுடைய பணியில் நம் பெண்மையும் சிறு பங்களிப்பதில் மகிழ்ச்சி. பெண்மை தோழிகள் இதில் பங்கேற்று பயன்பெற விழைகிறோம்.

Ministry of Women & Child Development, Food and Nutrition Board and
Mehta Children's Hospitals together welcomes you all Penmai members for the World Breast Feeding Week.

Please see the attached invitation and participate in the Breastfeeding week.

Here is some details about the contest,
For Well Baby Contest mothers with 3-12 month old babies are eligible. They have to bring the baby for the contest. In Mehta Hospital its one day contest where the winner would be announced on the same day itself, while in Malar Hospital and KM Speciality Hospital its open for one month, winners would be announced on September 1st. Judges would be Pediatricians and Gynaecs.

Pattimandram and Discussions are also there in Mehta hospital, to projects community view on Breastfeeding. In this all are welcome disregards of married or unmarried.

Our Sincere and Heartfelt thanks to Dr.Jayashree Jayakrishnan, who come forward to notify about this programme.

மகாகவி பாரதியின் வரிகள், வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!


WORLD BREAST FEEDING INIVITATION mehtha-2013-1.jpg

WORLD BREAST FEEDING INIVITATION mehtha-2013-2.jpg
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#3
மிக்க நல்ல தகவல் இளவரசியாரே.

smileys-baby-786364.gif
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#5
குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

திரவ தங்கம் என்று என்று அழைக்கப்படும் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்த யுனிசெப்ஃ மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது தாய்ப்பால் வார விழா.

முதன்முதலில் 1992 - ம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட தாய்ப்பால் வாரம் தற்போது 170 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.


உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாகுவதே தாய்பால் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.
குழந்தை பிறந்த முதல் இரண்டு தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


தாய்பால், குழந்தைகளை மட்டுமல்லாமல் தாய்மார்களையும் பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளத
நீரழிவு நோய், மார்பக புற்றுநோய், கர்பபை புற்றுநோய், பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன தளர்வு உள்ளிட்ட கொடிய நோய்கள் பால் கொடுக்கும் தாய்மார்களை தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.


குழந்தை இறப்பு விகிதத்தை தாய்ப்பால் வெகுவாக குறைகிறது. 6 மாதங்கள் தாய்ப்பால் புகட்டினால் ஆயிரம் குழந்தைகளை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகத் தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நோக்கத்துடன் கடைபிடிக்கப்படுகிறது.
தாயைச் சேர்ந்த குடும்பத்தாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.


NANDRI;''PUTHIYA THALAIMURAI
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#6
தாய்ப்பால் கொடுத்தால் தங்கள் அழகு போய்விடுமோ என தவறாக கருதி பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் தருவதில்லை.
வேலைக்கு செல்லும் தாய்மார்களாலும் தங்கள் குழந்தைகளுக்கு பால் தர இயல்வதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்ற சத்தான ஆகாரம் எதுவும் இல்லை.

பிரசவத்தின்பொழுது தாய் இறந்துவிட்டாலும் சேய்க்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது.

இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில், நாட்டின் முதலாவது பொதுத்துறை தாய்ப்பால் வங்கி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இதை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பிறந்த ஒரு குழந்தையின் அடிப்படைத் தேவையை இந்த புதுமையான திட்டம் நிறைவேற்றி வைக்கும்.

மிகுந்த கவனத்துடன் அதிநவீன வசதிகளுடன் இந்த தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. எனவே\\
இதில் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை.

தாய்ப்பால் பெற முடியாத குழந்தைகளுக்கு இங்கு தாய்ப்பால் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.