World Elders Day - உலக முதியோர் தினம் ( 01.10.2013 )​

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
உலக முதியோர் தினம் ( 01.10.2013 )​

​முதுமை என்பது இளமையின் முடிவு
முதுமை வயதான பின்வரும் வடிவு !
முதுமை என்பது இளமையின் இறப்பு
முதுமை ஆவதே முடிவின் தொடக்கம் !


முதியோர் நாளாம் உலகில் இன்று
முதலில் வணங்கு அவரை இன்று !
முதுமை அடைவோம் நாமும் நிச்சயம்
முதியவர் எனபர் ஒருநாள் நம்மையும் !


முதியோரே என்றும் முன்னோர் நமக்கு
முதலாய் கொள்வோம் மனதில் என்றும் !
முன்னோரின் வாழ்வே பாடம் நமக்கு
முதியோரின் வாழ்த்தே தேவை என்றும் !


முதியோரை மதித்து வளர்ந்திடு வாழ்வில்
முன்னேறும் பாதை அறிந்திடும் நமக்கும் !
முதியோரை என்றும் முகமலரச் செய்திடு
முள்ளும் மலராகும் உந்தன் வாழ்வில் !


முதியோர் உள்ளம் மழலையாய் மாறிடும்
முகமும் அகமும் உன்னை வாழ்த்திடும் !
முன்னோரை நினைத்து துவங்கிடு நாளை
முதியோரை வணங்கு நிறைவோடு வாழு !




-பழனி குமார்
(from eluthu.com)

 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#2
elderly people.jpg World Elders Day celebrated on October 1 globally. The world-over persons over 55 are considered to be senior citizens, unlike in India where 60 plus are thought to be senior citizens. Citizens past the age of 55 need to know that retirement means only retirement from work and not life.



 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#3
கருவறையில் சுமந்தேன் உன்னை...

கண்டவளுக்காக தூக்கி எறிந்தாய் என்னை..!

நண்பனாக நினைத்தேனடா... உன் சந்தோஷத்திற்காக என்னை

நடுத்தெருவில் விட்டாய்யடா..!

முதுகில் உப்பு மூட்டையாக சுமந்தேனடா... அவள் சொன்னாலென்று

முதியோர் இல்லத்தில் எங்களை சேர்த்தாயடா..!

பேரன், பேத்தியிடம் மகிழ்ச்சியாக இருந்தேனடா... உன்

பேராசைக்காக எங்களை விரட்டி அடித்தாயடா..!

வாழும் காலத்திலாவது எங்களை வாழவிடு... அவளின்

வாய்ப்பேச்சால் எங்களை நோகடிக்காதே..!

உன் கையால் எங்களை கொல்லி போட்டால்
அந்த கட்டையும் வேகாது... நல்ல

உள்ளங்களின் கையால் கொல்லி போட்டால்
அது தான் எங்களுக்கு மகிழ்ச்சி..!

வறுமையான மனிதனுக்கும் வீடு உண்டு... இந்த

வயதானவர்களுக்கென்று முதியோர் இல்லம் துணையுண்டு..!


graphics-grandma-and-grandpa-414775.gif

(முக்தியர்பாஷா )

 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#4
இன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில், குடும்ப உறவுகள் முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளையும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.


முதியோர் சுமையா:
முதியோர், குழந்தைகளுக்கு சமம் எனக் கூறுவர். 50 வயதை கடந்தவர்கள், முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர்களின் செயல்பாடுகள் மாறிவிடும். முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டி, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். குடும்பத்தில் முதியோரை அரவணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது முதியோரை கவனிக்க முன்வர வேண்டும்.


குறையுமா முதியோர் இல்லம்:


பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோரை பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. யாருடைய பெற்றோராவது முதியோர் இல்லத்தில் இருந்தால், மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர இத்தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசும் முதியோருக்கு, பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.


உதிர்ந்து போன சருகுகளா...


முதியவர்கள்? கொடிது கொடிது... முதுமை கொடிது; அதனினும் கொடிது... முதுமையில் வறுமை. முதுமையின் வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மதுரை அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் அலசி ஆராய்ந்தால், அங்கே முதியவர்கள் மட்டும், ஆதரவின்றி தனியாய் நின்று சிகிச்சை பெறுவர். நீண்ட வரிசையில் தள்ளாடி தள்ளாடி நின்று மருந்து வாங்கிச் செல்வர். இன்னும் சொல்லப் போனால், சிகிச்சை பெற முடியாமல், எங்கோ ஒரு மூலையில் ஓய்ந்து உட்கார்ந்திருப்பர்.நீண்ட வரிசையில் நிற்கும் போது, சில முதியவர்கள் மயக்கமடைந்து, இறந்த சம்பவங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதுமையின் கொடுமையால், மாதம் 10 பேர் வரை, இங்கு இறக்கின்றனர். சட்டைப் பையில் முகவரியோ, மொபைல் போன் எண்ணோ இருந்தால், போலீசார் உறவினர்களிடம் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், அனாதைப் பிணமாகிறது.


இளமையில் மனைவிக்காக... :
பிள்ளைகளுக்காக ஓடியாடி உழைத்த கால்கள்... முதுமையில் தள்ளாடும் போது, அரவணைக்க ஆளைத் தேடி தவிக்கும். மனைவி இழந்த முதியவருக்கோ, கணவனை இழந்த முதிய பெண்மணிக்கோ... உறவினர்களிடம் மதிப்பு குறைந்து விடும். அலட்சியம் கூடிவிடும். "நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று, "சுடு சொல்லை மழையாய்' பொழிவர். உடல் தளர்வோடு, உள்ளமும் தளர்ந்து, உழைத்த நாட்களை அசைபோட்டு உதவிக்கரம் தேடி தவிப்பர். பணமும், வசதியும் இருக்கும் இடத்தில் தங்குமிடத்திற்கு பிரச்னை இருக்காது. ஆனால் பேசுவதற்கு ஆளின்றி தனிமையின் பெரும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பர். வசதியற்ற மற்றும் நடுத்தர வீடுகளின் நிலைமையே வேறு. ஒண்டுவதற்கு இடமின்றி, உணவுக்கும் வழியின்றி... உருக்குலைந்து போய் விடுவர்.
ஏன்? முதுமை என்றால் இத்தனை பாராமுகம்? இன்றைய இளமை நாளைய முதுமையாய் மாறித் தானே ஆகவேண்டும்?
முதுமையின் கொடுமையை விவரித்த முதியவர்கள், தன் முகம் காட்ட மறுத்துவிட்டனர். "போட்டோ போட்டீங்கன்னா... பாவம் பிள்ளைங்க மனசு கஷ்டப்படும். நமக்கு வயசாகிப் போச்சு. அனுபவிச்சுத் தான் தீரணும்,' என்று மறுத்துவிட்டனர்.
இதுதானே பெத்த மனசு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

dinamalar
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#5
சந்ததிகளே முன்வராத போது அவர்களை கட்டாயப்படுத்தினால் முதியோரின் நிலை இன்னும் மோசமாகும். பெரும்பாலான முதியோர்கள் அவர்களின் நிலையை புரிந்து கொண்டு அமைதியாகி விடுகின்றனர். அப்படி எல்லோராலும் இருக்க முடியாது. முதுமை கொடிது என்பது அனுபவிக்கும் பொழுதுதான் தெரிகின்றது. இளமையில் முதியோர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரவே மனதில் எண்ணம் தோன்றுவது இல்லை. அவர்களுக்கு இந்த உலகில் பாதிக்குமேல் பிரச்சனைகளை களைய, பணம் கட்டாயம் தேவை. 1000 ரூபாயாக முதியோர் ஒய்வுதியத்தை உயர்த்தி இந்த அரசு அவர்கள் மனதில் பால் வார்த்தது என்பதை யாராலும் மறுக்க இயலாது. அந்த பணத்தை பெறும் பொழுது அவர்களுக்கும் ஏற்படும் அந்த சந்தோசத்திற்கு நிகர் இவுலகில் எதுவும் கிடையாது. ஆனால் ஒன்று, இந்த பணம் ஓய்வுதியம் பெறாத எல்லா முதியோருக்கும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமல் வழங்கவேண்டும் பணக்காரன் வீட்டிலும் கல்நெஞ்சன் இருந்தால் முதியோர் ஏழைதான். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளை மறந்து முதியோருக்கு உதவுகிறேன், இதனால் நான் செய்த பாவம் எல்லாம் அது இல்லாமல் செய்து விடும் என்ற நம்பிக்கையோடு சந்தோசமாக அவர்களுக்கு ஓய்வுதியம் கிடைக்க வழி செய்ய வேண்டும், தவறிகூட அதற்கு தடையாக இருக்கக்கூடாது. அவர்கள் ஆசி இந்த அரசு வீழ்ந்து விடாமல் தாங்கி பிடிக்கும்
=====================================

அன்னையும் பிதாவும் மழலையாய் மாறும் போது மனசு மறுக்கிறதென்றால் அவர்களை மறக்கின்றதென்றால் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை .இளைய சமுதாயம் புரிந்து கொள்ளவேண்டும் இனி வரும் காலத்தில் நாமும் முதியோர்தான் . முதியோர்களின் உடல் நலன் மன குண நலன்கள் குறித்து ஆரம்ப வகுப்பிலிருந்தே குழந்தைகளுக்கு பள்ளி பாடமாக வைக்கவேண்டும் அனுபவத்தில் அன்பினால் பெற்ற அறிவு கலியின் கொடுமையால் வற்றிப்போகும் போது இந்த கல்வியறிவு கடுகளவேனும் முதுமையை மதிக்க வழி நடத்த உதவும். பெற்றவுடன் பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்த்து அதை அந்நிய தேச கனவுகளுடன் பணத்திற்காக படிக்கவைக்கும் இன்றைய பெற்றோர்களே தயவு செய்து பணத்தை சம்பாதிக்கும் கனவுடன் முதுமையை பேணி பாது காக்கும் எண்ணத்தையும் இன்றே விதையுங்கள் நம் இந்திய தேசத்தில் தான் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அதுபோல முதுமைக்கும் முதியோருக்கும் முக்கியத்துவம் கொடுதொமேயானால் இந்தியா அன்பு செலுத்துவதிலயும் அறிவிலும் இன்றும் என்றும் வாலரசு தான்
==========================
முதியோர் இல்லத்தில், சேர்ப்பதற்காக அழைத்துவரப்படும் முதியவர்களுக்கு சந்ததிகள் இருந்தால், அவர்களிடம் பக்குவமாகப் பேசி திரும்பவும் அவர்களை உறவினர்களோடு சேர்த்து வைப்பதற்காக, பிரத்யேகமாக ஒரு கலந்தாய்வுக் குழுவின் பரிசீலனைக்கு உட்பட்ட பிறகே அவர்களை முதியோர் இல்லத்தில் சேர அனுமதிக்க வசதியாக ஏதேனும் ஒரு புது உத்தியைக் கையாண்டால், முதியோர்களை அவர்கள் சந்ததிகள் கைவிடப்படுவதைத் தடுக்கலாம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
முதியோர் தினத்தைக் கொண்டாடி, முதியோர்களை மதிப்போம் , உணர்வுபூர்வமாக
 

saradhamurugan

Citizen's of Penmai
Joined
Dec 22, 2012
Messages
560
Likes
2,273
Location
coimbatore
#7
vajo-300x223.jpg
ஒக்டோபர் முதலாம் திகதி
நாளை உலகை
ஆளப் போகும் – எம்
இளஞ்சிட்டுக்களின்
திருநாள்…
சிறுவர் தினம்-அன்றே
முதியோர் தினமாம் – ஏன்
இரண்டும்
ஓரே தினத்தில்…?
முதுமை அது
இரண்டாவது
குழந்தைப் பருவமாம்…
எங்கோ வாசித்த
அழகிய வாசகங்கள்
என் நினைவலைகளில்…
அற்புதமான வாசகங்கள்
அவை…
இலட்சியங்களையும்,
எதிர்பார்ப்புக்களையும்
மனதில் ஏந்திய – நம்
இளய மொட்டுக்கள்..
கனவுகள் கண்டது
இவர்கள்
மட்டுமா..?
இளமைக்கு
விடை கொடுத்தனுப்பிய – நம்
முதியோர்களான
மூத்தோர்களும்தான்..
அறிவுரைகளை,
ஒழுக்கங்களை
சொல்லித்தரும்
ஆசானாக
பாடல்கள், கதைகள்
பலவற்றை
தன்னுள் கொண்ட
கலைஞனாக….
கைதேர்ந்த
கை வைத்தியராக,
அனுபவத்தோடு
போராடிய
அனுபவசாலியாக் – நம்
மூத்தோர்கள்..
அன்று
நாம் வாழ -தாய்
வயிற்றிலோர்
கருவறை இருந்தது..
இன்று
முதியவரான
அத்தாய் வாழ – ஓர்
இருட்டறை
கூடவா
இல்லாமல் போய்விட்டது
எம் மாளிகை வீட்டில்..
முதியோரை நாமும்
முறையாய்
காத்திட்டால்- ஏன்
இன்று
முதியோர் இல்லங்கள்
எம் நாட்டில்…?
நிம்மதியிழந்து
வேதனைகளை
சோதனைகளாக கொண்டு
வாழும்
முதியோர்கள்
எத்தனை பேர்
நம் மத்தியில்
இலை மறை காயாக…?
இந்நாளிலாவது
அவர்களுக்கு
கிடைக்குமா
அன்பும் – மன
அமைதியும்…?
இறைவனை நானும்
இனிதாய்
வேண்டுகிறேன்…!

(பாத்திமா)
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#8


 
Last edited:

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
[TABLE="width: 100%"]
[TR]
[TD][/TD]
[/TR]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
[TABLE="width: 405, align: left"]
[TR]
[TD]
இன்று (அக்.01) உலக முதியோர் தினம்.

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.

அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

இந்த ஆண்டு உலக முதியோர் தினத்தின் நோக்கம், `வயதானவர்களின் உரிமைகள்' என்பதே.

உலக அளவில் 2008ம் ஆண்டு நிலவரப்படி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் என்பது மேலும் கவனிக்கப்பட வேண்டியது.

எனவே வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பிற்கும் உறுதி மேற்கொள்வோம்!
[/TD]
[/TR]
[/TABLE]
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
நீங்களும் நாளைக்கு தாத்தா - பாட்டி தான்!

பள்ளி விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்று சொன்னாலே குழந்தைகள் குதூகலம் ஆகிவிடுவார்கள். காரணம் அதிகப்படியான பாசத்தை தாத்தா வீட்டில் தான் காணமுடியும்.

இப்படிப்பட்ட அன்புக்குரிய எல்லா தாத்தா, பாட்டிகளின் மேன்மையையும் உணர்த்துவதற்காகவும், உணர்வதற்காகவும் அனுசரிக்கப்படும் தினம் - அக்டோபர் 1: உலக முதியோர்கள் தினம்.

கடந்த 1982-ம் ஆண்டில் ஐ.நா. அமைப்பால் உருவாக்கப்பட்ட கமிட்டியின் மூலம் முதியோர்களின் தேவைகள், அவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பது போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டு 1990-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இனி உலக முதியோர்கள் தினம் என பிரகடனப்படுத்தியது.

முதியோர்களை பாதுகாப்பதில் இந்தியர்கள் அதிக கவனம் செலுத்துபவர்கள். நமது கூட்டுக் குடும்ப கலாசாரத்தைப் பார்த்து அந்நியர்கள் ஆச்சரியப்பட்டார்கள். படிப்பதற்காக, சுற்றுலாவுக்காக என இந்தியா வரும் அயல்நாட்டவர்கள், இந்தியர்கள் உறவுகளோடு ஒன்றாக வாழ்வதை பார்த்து இங்கே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதையும் பார்த்திருக்கிறோம்.

அத்தனை பெருமைக்குறிய இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில்தான் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையையும் வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் ரோட்டுக்கு அனுப்பும் அவலமும் நடக்கிறது.

அதேபோல், பெற்றோர்களை பாதுகாக்காத பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம் உருவாக்கும் அளவுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது.

ஏன் இந்த நிலை?

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெண் வீட்டார் முதலில் போடும் கண்டிஷன், 'கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணும் மாப்பிள்ளையும் தனிக் குடித்தனம் வைச்சுடணும்' என்பது தான். பிரச்னையே இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. 'அத்தனை வருடங்கள் வளர்த்து ஆளாக்கும் பெத்தவங்களை விட்டுட்டு நாங்க மட்டும் புகுந்த வீட்டுக்கு வர்றோம்.. ஏன் நீங்க வந்தா என்ன தப்பு?' என புரியாமல் பேசும் பெண்களை என்னவென்று சொல்வது.

தனக்கும் அப்பா, அம்மா இருக்கிறார்கள் அவர்களின் நிலை என்ன ஆகும் என நினைத்து பார்ப்பதில்லை. பருவ வயதிலிருந்து ஓட ஆரம்பித்து திருமணம், குழந்தைகள் வளர்ப்பு, அவர்களது படிப்பு, திருமணம் என அனைத்து கடமைகளும் முடித்துவிட்டு நிம்மதியாக கடைசி காலத்தை பெத்த பிள்ளைகள், அவர்களின் பேரக்குழந்தைகளுடன் கழிக்கலாம் என நினைக்கும் பல முதியவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் பிள்ளைகள் தான் இங்கே இருக்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினர் தங்கள் குழந்தைக்கு பள்ளிப் போக, மற்ற விஷயங்களை கற்றுத்தர இன்டர்நெட் போதும் என நினைக்கின்றனர். தொழில்நுட்பத்தை கற்றுத்தரும் இணையதளம் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத் தராது. ஆனால், வீட்டில் முதியவர்கள் இருந்தால் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். குழந்தைகளை மட்டுமல்ல உங்களையும் வழிநடத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

வயதாக ஆக முதியவர்களின் உடல் மற்றும் மனதும் குழந்தைப் பருவம் போன்று ஆகிவிடும். இதையே 'செகண்ட் சைல்ட்வுட்' என்பார் ஷேக்ஸ்பியர். எனவே தான் முதியவர்கள் சக குழந்தைகளுடன் மிக அன்பாக பழகுகின்றனர்.

பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய முதியவர்களை வீட்டில் வைத்து பாதுகாப்பது நமது முக்கிய கடமை. நீங்களும் ஒருநாள் தாத்தா பாட்டி ஆவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இனியாவது சிந்திப்பீர்களா?

சரி இனி பேருந்தில் நின்று கொண்டு வரும் முதியவர்களுக்காவது இடம் கொடுப்பீர்கள் தானே?

- பானுமதி அருணாசலம்
நன்றி : ஆனந்த விகடன்
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.