World environment day -----உலக சுற்றுச் சூழல்தினம்....

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#1
WORLD ENVIRONMENT DAY -----உலக சுற்றுச் சூழல்தினம்....

நம் தேவைக்கு இயற்கை நமக்கு அள்ளி ..அள்ளி தரும் அட்சயப் பாத்திரம்.....நம் பேராசைக்கு அல்ல...

அநாவசியத் தேவைகளை..அத்தியாவசியத் தேவைகளாக கருதி....

இயற்கை அன்னையை சுரண்டும் எண்ணத்தை கைவிட்டு....

நாமும் வாழ்வோம் பிற உயிரினங்களையும் வாழவைப்போம்....

நம்மை காக்கும் இயற்கையை நாமும் காப்போம்.....
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#2
சிறந்ததொரு உலகம் அமைப்போம்
சுற்றுப்புறம் காக்க முதலில்
வீட்டில் இருந்து துவங்குவோம்

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் :)

அழகா சொன்னீங்க சித்ரா அக்கா :thumbsup
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
கடந்த சில காலங்களாகவே மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதை நாம் கவனித்து வருகிறோம்.இதனை இந்த உலகும் நன்கு உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலைமையையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்.

இதன் காரணமாக சுமார் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை போட்டு, அதனில் கிடைக்கும் தண்ணீரில் சில இரசாயண கலவைகளை கலந்து இன்று ஒரு கேன் தண்ணீர் சுமார் ரூ.20லிந்து அதிகபட்சமாக ரூ.100 வரைக்கும் விற்பனை செய்வதையும் நாம் பார்த்து வருகிறோம். அதுமட்டுமல்லாது அதனையே வாங்கி பருகக்கூடிய நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

மழையின் அளவு குறைந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமாக சொல்லப்படுவது மரங்களை அழிப்பதுதான். சமீபத்தில் இந்த உலகையே ஒரு ஆட்டு ஆட்டி பார்த்து விட்டுச் சென்ற பயங்கரமான சுனாமி அலைக்கள். இந்த சுனாமி அலைகள் கூட மரங்கள் இல்லாத காரணத்தினால் தான் அதிகபடியான பாதிப்பை ஏற்படுத்தியது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அப்படி இருக்கையில் இன்று ஒரு நாளைக்கு எண்ணற்ற மரங்கள் இடத்தேவைகளுக்காகவும், பயன்பாட்டிற்காகவும், நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காகவும், சமூக விரோதிகளாலும், இன்னும் பல காரணங்களாலும் வெட்டப்படுகின்றன. உலக சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, மரங்களை அழிப்பதன் மூலமாக இந்தியா போன்ற நாடுகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்றும் பல இயற்கை சீற்றங்களை சந்திக்கும் என்றும் தகவல்களை தந்துள்ளன

ஆனாலும் இத்தகைய ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வந்த பின்னரும் மரங்களை வெட்டுவதை யாரும் நிறுத்தியதாக தெரியவில்லை. இதில் அரசு அக்கரை எடுத்துக் கொள்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மழை அளவு குறைந்து போய் தண்ணீருக்கு அலையோ அலையயன்று அலையும் போக்கினைத்தான் நாம் வரக்கூடிய சந்ததியினருக்கு விட்டுச் செல்ல காத்திருக்கின்றோமா?

மரங்கள் இல்லாததால் தான் மழைகள் இல்லாமல் போயின. இதனால் தான் இன்று கடுமையான தண்ணீர் பஞ்சம் எங்கு பார்க்கினும் நிலவுகிறது என்பதை உணர்ந்த பல நல்லுள்ளம் கொண்ட சமுதாய அக்கரைவாதிகள் தங்களால் முயன்ற அளவுக்கு மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாது இந்த சமுதாயத்தையும் மரங்கள் நடவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல செயல்பாடுகளை செய்கின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தன்னை எல்லோரும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஒரு இளைஞர். இவர் கல்லூரி படிப்பு முடித்து, தற்போது சுயமாக தொழில் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் படிக்கும் போதும், அதன் பிறகும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் வடமாநிலங்களில் ஏற்பட்ட மத கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானே முன்னின்று, தனக்னென்று ஒரு நண்பர்கள் வட்டத்ததை ஏற்படுத்திக் கொண்டு ஒரு குழுவாக இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.

இவரின் நண்பர்கள் கூட்டம் மரங்களின் தேவையை உணர்ந்து, இதனின் பயன்களை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் தற்போது இளையான்குடி முழுக்க சுமார் 500 மரக்கன்றுகளை நடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். தற்போது 500 என்ற இலக்கை நிர்ணயித்து பல இடங்களில் மக்களுக்கு பயன் தரும் மற்றும் நிழல் தரும் மரங்களை நட தொடங்கியுள்ளனர்.

குறித்த செய்தியை அறிந்து இவரை சந்திக்க நேரில் சந்திக்க சென்ற போது, மரம் நடும் வேலையில் ஈடுபட்டிருந்தனர் இக்பால் என்ற அந்த இளைஞரும் அவரின் நண்பர்களான அஞ்மல், சாகுல் மற்றும் உமர் ஆகியோரும். மரம் நடுவது குறித்து அவர்களிடம் பேசிய போது, மழை இல்லாததினால் ஏற்படும் தீமைகளையும், தற்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் இழப்புகளையும் விளக்கியவர்கள், இதனை தவிர்த்து மழை நீரை பெருவதென்றால் மரம் ஒன்றே ஒரே வழி என்ற எண்ணம் தோன்றிய உடனே இதில் இறங்கி விட்டதாக இந்த நண்பர்கள் பட்டாளம் கூறியது.

இந்த மரக்கன்றுகளை நடுவதற்காக தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்வதுடன் பலரிடம் நன்கொடைகளையும் பெற்று மரங்களை நட்டு வருகின்றனர். இன்று மரங்கள் நடுவது என்பது சிறந்த விச*யமாக இருந்தாலும் அதனை பல நல்ல உள்ளங்கள் அங்கொண்றும் இங்கொண்றுமாக செய்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் இக்பால் மற்றும் இவரின் நண்பர்கள் மரம் நடுவதை பெரிதாக நாம் சொல்லி காண்பிக்க வேண்டியதில்லையே என்ற எண்ணம் தோன்றலாம்.

சமுதாய அக்கரையுள்ள யாவரும் தானாக முன்வந்து தான் இது போன்ற நல்ல செயல்களை செய்வார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு விளம்பரமும் தேடிக் கொள்வது இல்லை. ஆனால், இளையான்குடியில் மரம் நடும் செய்தியில், நம்மை சிந்திக்க கூடிய செய்தி உண்டு. ஆம். இந்த மரம் நடும் நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கும் சகோதரர் இக்பால் ஒரு “மாற்றுத்திறனாளி”.

சாதாரண மனிதர்களே நமக்கு இது வேண்டாத வேலை என்று நினைத்து விலகி போய் கொண்டிருக்கையில், இந்த சமுதாயத்திற்கு தன்னுடைய பங்கை பதிவு செய்ய நினைக்கும் இந்த மாற்றுதிறனாளியான இக்பாலின் செயல் பிறரை சிந்திக்க வைக்கும். இவருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் இவரின் நண்பர்களான அஜ்மல், சாகுல் மற்றும் உமர் போன்றவர்கள். இந்த உலகத்தைப் பற்றி எந்த அக்கரையும் இல்லாத பல மனிதர்களுக்கு மத்தியில் ஒரு இலக்கை ஏற்படுத்தி அதனை நோக்கி தன்னை பயனித்து கொண்டிருக்கும் இந்த இக்பாலை போல மற்றவரும் முன்வந்தால் ஏன் இந்த மண்ணில் மழை என்பதற்கு பஞ்சம் ஏற்படப்போகிறது?
இவர் இதனோடு நின்றுவிட வில்லை. மழை இல்லாதற்கு மரம் வெட்டப்படுவது ஒரு காரணம் என்பது மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் விமானத்தின் மூலம் தூவப்பட்ட விதையால் இன்று அனைத்து நிலங்களிலும் வியாபித்துக் கொண்டிருக்கும் கருவேல் மரங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் அதனால் தான் மழை என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது என்றும், அதற்காக மக்களிடத்தில் விழிப்புணர்வு எற்படுத்த ஆயத்தமாகி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக “நம் உரிமை புரட்சியின்” செய்தியாளர் செய்யது அலி எழுதிய
கட்டுரையை படித்த இவர், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதனை பிரசுரமாக அச்சடித்து மக்கள் மத்தியில் விநியோகம் செய்ய முயற்சிகளை கொண்டிருக்கின்றார். இவருக்கும், இவரது நற்செயல்களுக்கு பக்க பலமாக இருந்து முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் இவரின் நண்பர்களும் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

500ஐ விடுங்க, நம்மால் ஒரு மரக்கன்று நட முடியாதா? முடியும்! வாருங்கள்!!. செயல்படுத்துவோம்!!

courtesy: inneram.com
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,585
Likes
140,720
Location
Madras @ சென்னை
#4
உலக சுற்றுச் சூழல்தினம்

graphics-earth-067745.gif
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.