You can buy your Spectacles online!!

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
இது கவிஞர் மகுடேஸ்வரனின் அனுபவம்


கண்ணாடி அணிகின்றவரா நீங்கள் ? உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தார்க்கோ - கண் மருத்துவமனைக்குச் சென்று கண்பார்வை அளவை அட்டையைப் பெற்றுக்கொண்டபின் புதுக்கண்ணாடி வாங்க விழைந்தீர்களா ?

கண்ணாடிச் சட்டம் ஆயிரத்திலிருந்து மூவாயிரம் வரையும், கண்ணாடிக்குத் தனியாக ஆயிரம் முதல் மூவாயிரம் வரையும் பிடுங்கப் பார்த்தார்களா ? அணிந்திருக்கும் கண்ணாடியில் கீறல் விழுந்திருப்பதால் மாற்றும் எண்ணத்தில் இருக்கிறீர்களா ? மாற்றப்போனால் மறுபடியும் ஆயிரக்கணக்கில் பிடுங்குவார்களே என்று அஞ்சுகிறீர்களா ? கவலைவேண்டா. எளிமையாய் அருமையாய் முடித்துக்கொள்ள ஒரு வழியிருக்கிறது.


லென்ஸ்கார்ட் (www.lenskart.com) என்றொரு இணையக் கடை இருக்கிறது. அதில் தம் வாடிக்கையாளர்க்கு முதல் கண்ணாடிச் சட்டத்தை (Frame) இலவசமாக வழங்குகிறார்கள்.


அந்தத் தளத்திற்குச் சென்று மேலுள்ள பட்டையில் First Frame Free என்பதைச் சொடுக்கினால் கண்ணாடிச் சட்டங்களின் வகைகளைக் காட்டும். அந்தப் பக்கத்தின் மேலேயுள்ள வாய்ப்பு வரிசையில் நமக்கு வேண்டிய கண்ணாடிச் சட்டத்தின் அளவு (Medium/Small), சட்டத்தின் வகை (Halft Rim/Full Rim) ஆகியவற்றைச் சொடுக்கித் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு நாம் தேர்ந்தெடுக்க விரும்பும் கண்ணாடிச் சட்டத்தைச் சொடுக்கி Add Power என்ற கட்டளையைத் தேர்ந்தெடுத்தால் நம் கண்பார்வை அளவையை நிரப்பும் படிவம் வரும். முன்னதாக ஆடியின் வகையாக Regular Lens என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். மற்ற ஆடிகள் எல்லாம் தோதானவை அல்ல - விலையும் அதிகம்.

ஆடிக்கு மட்டும் 499 ரூபாய் (+இதர வரிகள்) கட்டணம் உண்டு. பிறகு நம் முகவரி, பணம் செலுத்தும் முறை ஆகியவற்றைச் சொடுக்கினால் நமக்கான கண்ணாடி சில நாள்களில் வந்துவிடுகிறது. நான் வாங்கினேன், நல்ல தரத்தில் இருந்தது. வெறும் 523 ரூபாயில் வேலை முடிந்தது. நம் தேவையைப் பூர்த்தி செய்து அளித்ததில் ஏதும் தவறோ மாற்றமோ இருந்தாலும் அத்தளத்தின் உள்பெட்டியில் அல்லது தொலைபேசியில் நம் விவரத்தைச் சொன்னால் உடனடியாகச் செவிசாய்க்கிறார்கள். முயன்று பாருங்கள் !
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Really very useful information! Very much helpful to the penmai members! Thank you Jayanthy for sharing this information!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Welcome sister.

Yes....I felt that this might be useful for the needy and hence shared.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.