Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Database has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 83

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Datastore has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1478

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Input_Cleaner has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1819

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Registry has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 3138

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; vB_Session has a deprecated constructor in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 3526

Warning: Use of undefined constant DIR - assumed 'DIR' (this will throw an Error in a future version of PHP) in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 5753

Warning: Use of undefined constant DIR - assumed 'DIR' (this will throw an Error in a future version of PHP) in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 5754

Warning: Function get_magic_quotes_gpc() is deprecated in /home/youth/public_html/forumsold/includes/class_core.php on line 1960
சிந்தனை பேழை


சிந்தனை பேழை

123
  1. lakish
    lakish
    கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதம்.

    கவிதைகளை ரசிக்க மட்டும் தெரிந்த எனக்கு

    அதை பாராட்டி எழுதுவதற்கு வார்த்தைகளை மனக்கடலில் தேடி கொண்டிருக்கிறேன்

    சிறு வேண்டுகோள்

    கவிதைகள் மிகவும் பிடித்திருந்தால் அதை தெரிவிப்பதற்கு (like option) வைக்கலாமே

    வார்த்தைகளால் வெளிபடுத்த முடியாத பாராட்டை அதன் மூலம் தெரிவிப்போமே
  2. amnotyou
    amnotyou
    திரு. பாலா, அருமையான கவிதை தொகுப்பிற்கு மிக்க நன்றி..
    உங்கள் சிறப்பான தொகுப்புகள் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்..
  3. balamade4u
    balamade4u
    தமிழன் பிறமொழியில் பேசுபவனை
    குரு வாகப் பார்க்கிறான்...
    தாய் மொழியில் பேசுபனை
    குரு குரு எனப் பார்க்கிறான்
    ...
  4. balamade4u
    balamade4u
    மழை பெய்யும் முறை

    மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இது ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன். ஆனால் இதனை விளக்கும்முகமாக,

    நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்
    பொறை தவிர்பு அசைவிட (பரி. 6:1 - 2)

    என்று பரிபாடலில், முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்.
  5. balamade4u
    balamade4u
    அழகென்ப ததற்கு அழிவுண்டு அறிக
    அழகென்ற ஒன்றே நிழலென்று புரிக
    அஞ்சன விழியும் அமிழ்தூறு மிதழும்
    வஞ்சிக் கழகென்னும் எண்ணம் துறநீ!

    மிஞ்சும் எழிற்கெல்லாம் அன்பே பெயராகும்
    கொஞ்சும் மொழிக்கென்றும் அதுவே துணையாகும்
    காதல் வைத்தென்றும் கருமம் செய்தாலே
    காணும் விடைதன்னில் கவலை சருகாகும்

    காயம் அழகென்று கருத்தை நீகொண்டு
    காதல் இல்லாது எதையும்நீ எண்ணாதே
    காயம் பொய்யென்று காலம் உணர்த்துகையில்
    கசியும் பொருள்சேர மனமே ரணமாகும்!

    அன்பின் ஆடையில் எதுவும் அழகாகும்
    அருளும் பார்வையின் அழகு நிலையாகும்
    உயிர்கள் உளம் தன்னின் உணர்வை நீபோற்று
    உளங்கள் ஒளிபெறட்டும் அன்பு விளக்கேற்று!
  6. balamade4u
    balamade4u
    வெப்பக் கனலில் வெண்ணுளம் வெறிக்க
    உப்புக் கடலில் கண்களும் குளிக்க
    செப்பும் மொழிகளில் தனிமையும் தகிக்க
    அப்பிய துயருள் அலைக் கழிந்தேனே!

    கன்னத் தடயம் காதலுக் கேங்க
    பின்னிக் கொண்ட ஆசைகள் வீங்க
    மண்ணிற் பிறந்த காரணம் புலம்பி
    எண்ணிற் றடங்கா ஏக்கம் கொண்டேனே!

    உள்ளினில் ஏதொ குறையுடன் துடிக்க
    முள்ளினை அணிந்த முறுவலே விரித்து
    புள்ளியாய் நானும் தேய்ந்திடும் வேளை
    அள்ளியே அமுதுடன் பெண்ணவள் வந்தாள்

    தண்ணெனும் தென்றல் தழுவிடக் கண்டேன்
    விண்ணும் எனக்கென விரித்ததாய்க் கொண்டேன்!- என்
    பண்ணினில் பிரியம் வழிந்திடக் கண்டேன்
    பாரெலாம் இன்பம் நிறைந்திடக் கண்டேன்

    பொற்பத மங்கை பொழிந்த நல்அன்பால்
    நட்பின் இனிமை நானும் சுவைத்தேன்!
    அச்சுடன் தாள்கள் ஆசையாய்ப் பார்க்க
    அற்பம் அற்பம் என்றே சிரித்தேன்!

    வெப்பக் காற்றெடுத்து வேதனை கொளுத்த
    உப்புக் கடலதன் ஆவியும் கடத்த- உடனே
    கப்பிய மேகம் பொழிந்திடக் களித்தேன்
    அற்புதம் அற்புதம் என்றே குதித்தேன்
123
Bookmarks
Like It?
Share It!







Follow Penmai on Twitter